search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளையராஜாவுக்கு எம்.பி. பதவி நாட்டிற்கே கவுரவம்- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இளையராஜாவுக்கு எம்.பி. பதவி நாட்டிற்கே கவுரவம்- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

    • கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
    • புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு அடிக்கடி வந்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    அதுபோல் 3 நாள் பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு நேற்று வந்தார். நேற்று காரைக்கால் மாவட்டத்துக்கு சென்ற அவர் அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு ஆஸ் பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    2-வது நாளாக இன்று புதுவையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிககளில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

    கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இசைஞானி இளைய ராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம். இளையராஜாவின் திறமையின் மூலமும், இசையின் சாதனைகள் மூலமும் நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.

    புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிபையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×