search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் கார்"

    • புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம்.
    • வோக்ஸ்வேகன் இந்தியா தலைமை செயல் அதிகாரி பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனம் முலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் வோக்ஸ்வேகன் நிறுவனம் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து பாரத் மொபிலிட்டி நிகழ்வில் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன யுக்தி எங்களது ஐ.சி. என்ஜின் மாடல்களுக்கான யுக்திகளை விட அதிக வித்தியாசமாக இருந்துவிடாது. இதனால், இந்திய சந்தைக்கு ஏற்றவகையிலும், சர்வதேச வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துவோம். புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும்."

    "எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக வோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் பல மில்லியன் யூரோக்கள் அடங்கிய பெரும் தொகை முதீலடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், புதிய வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பற்றி திட்டமிடுவோம்," என்று தெரிவித்தார்.

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாக தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் eVX மாடலை 2025 வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில், மாருதி eVX மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களின் படி மாருதி eVX மாடலில் ADAS சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மாருதி eVX கார் அறிமுகமாகும் போதே ADAS வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், ADAS லெவல் 1 அல்லது லெவல் 2 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

     


    இந்த காரில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், கன்மெட்டல் நிறம் கொண்ட மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டர்கள், சி பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது. முன்னதாக eVX மாடல் 2023 ஜப்பான் மொபிலிட்டி விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    • இந்த கார் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
    • முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என தகவல்.

    அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    ஜீப் பிரான்டின் தாய் நிறுவனமான ஸ்டெலான்டிஸ் STLA M பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி புதிய காம்பஸ் மாடல் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என பலவிதங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட STLA மீடியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் மாடலை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பெட்ரோல், டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களுக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இது முன்புறம் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    இந்த காரில் அதிகபட்சம் 98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதன் பெர்ஃபார்மன்ஸ் பேக் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    • மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
    • எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    போர்ஷே நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் - மக்கான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே மக்கான் EV இரண்டு 4-வீல் டிரைவ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஒன்று 408 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் 4, மற்றொன்று 639 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் டர்போ ஆகும்.

    புதிய போர்ஷே மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. இதன் விலை ரூ. 1 கோடியே 65 லட்சம் ஆகும். வினியோகம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது.


     

    புதிய மக்கான் 4 மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை போர்ஷே இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதி வரை மக்கான் எலெக்ட்ரிக் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனுடன் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு இந்த சீரிஸ் முழுமையாக எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    எலெக்ட்ரிக் திறன் கொண்ட மக்கான் மாடல் தற்போதைய பெட்ரோல் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது 103mm நீளமாகவும், 15mm அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆடி Q6 இ-டிரான் மாடலுடன் உருவாக்கப்பட்டது. இரு கார்களும் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளன.


     

    வெளிப்புறத்தில் புதிய மக்கான் எலெக்ட்ரிக் மாடலின் ஸ்டைலிங் ஒரிஜினல் மக்கான் மாடலை தழுவியும், டிசைனிங் அம்சங்கள் டேகேன் மாடலை தழுவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஹெட்லைட்கள் செவ்வக வடிவிலும், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் மாடல்களில் டூயல் பெர்மனன்ட் சின்க்ரோனஸ் மோட்டார்களும், ஒவ்வொரு ஆக்சில்களிலும் சிங்கில் ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மக்கான் 4 மாடலில் 408 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     


    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மக்கான் டர்போ மாடலில் இவை 639 ஹெச்.பி. பவர், 1130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    மக்கான் எலெக்ட்ரிக் கார்களில் உள்ள 95 கிலோவாட் ஹவர் பேட்டரியை 800 வோல்ட் டி.சி. சிஸ்டம் மூலம் 270 கிலோவாட் மூலம் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 21 நிமிடங்களே ஆகும். இத்துன் பிரேக்கிங் மற்றும் காரின் வேகத்தை குறைக்கும் போது 240 கிலோவாட் வரையிலான திறன் பெற முடியும்.

    போர்ஷே மக்கான் 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 613 கிலோமீட்டர்களும், மக்கான் டர்போ மாடல் 591 கிலோமீட்டர்களும் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    • டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    • இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது eC3 சீரிசில் புதிதாக டாப் என்ட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. eC3 மாடல் சிட்ரோயன் நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் ஹேச்பேக் ஆகும்.

    புதிய eC3 ஷைன் வேரியன்ட் விலை ரூ. 13 லட்சத்து 20 ஆயிரம் என துவங்கி ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. விலை அடிப்படையில் இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

     


    சிட்ரோயன் eC3 ஷைன் வேரியன்டில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, 15 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தகவல்.
    • சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் கிரெட்டா EV மாடலின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், நோஸ் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

     


    கிரெட்டா EV மாடலில் ஏரோடைனமிக் திறன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் கிரெட்டா EV மாடலின் சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கிரெட்டா EV மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இவற்றை எல்.ஜி. நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இது எம்.ஜி. ZS EV மாடலில் உள்ள 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அளவில் சிறியதாகும்.

    • ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் 450 கி.மீ. ரேன்ஜ் கொண்டிருக்கும் என தகவல்.

    மஹிந்திரா நிறுவனம் XUV.e9 கான்செப்ட் மாடல்களை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 2025 வாக்கில் அறிமுகமாக இருக்கும் நிலையில், மஹிந்திரா XUV.e9 மாடல் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இத்துடன் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் லுக், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, எக்ஸ்டென்டட் ரூஃப் ஸ்பாயிலர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது.


     

    அளவீடுகளை பொருத்தவரை XUV.e9 மாடல் 4790mm நீளம், 1905mm அகலம், 1690mm உயரம் மற்றும் 2755mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கூப் எஸ்.யு.வி. மாடல் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மை மஹிந்திரா மற்றும் ஃவோக்ஸ்வேகன் பகிர்ந்து கொள்கின்றன.

    முன்னதாக வெளியான ஸ்பை படங்களில் XUV.e9 மாடலின் இன்டீரியர் விவரங்கள் தெரியவந்தது. இதில் 3 ஸ்கிரீன் செட்டப், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், புதிய சென்டர் கன்சோல், டிரைவ் மோட் செலக்டர் லீவர் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV.e9 மாடலில் 80 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • டாடா எலெக்ட்ரிக் கார்களில் இதுபோன்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV மாடலை காட்சிக்கு வைத்தது. கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் EV மாடலுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது காப்புரிமை பெற்று இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    காப்புரிமை படங்களின் படி ஹேரியர் EV மாடல் சமீபத்திய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் புதிய அலாய் வீல்கள், டெயில் கேட் பகுதியில் ஹேரியர் EV என்ற பேட்ஜ்-க்கு மாற்றாக .ev என்ற பேட்ஜிங் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்திய டாடா எலெக்ட்ரிக் கார்களில் இவ்வாறான வழக்கம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

     


    இந்த காரின் தோற்றம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், அந்த வெர்ஷனில் உள்ள அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேரியர் EV மாடலின் முன்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    டாடா ஹேரியர் EV மாடல் பலவித பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த கார் டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய Acti.EV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் மஹிந்திரா XUV.e8, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இரட்டை மோட்டார்கள் கொண்டுள்ளது.
    • ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2030 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக மாற ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் கொண்டிருக்கிறது. டிசைனை பொருத்தவரை ஸ்பெக்டர் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட பாந்தியன் முன்புற கிரில், ஸ்பிரிட் ஆஃப் எக்டசி, ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 21 இன்ச் ஏரோ டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     


    காரின் உள்புறம் டச் ஸ்கிரீன் கொண்ட அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பிரீமியம் இன்டீரியர், கதவு மற்றும் டேஷ்போர்டில் இலுமினேட் செய்யப்பட்ட பேனல்கள், இருக்கை மேற்கவர்களுக்கு ஏராளமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை 195 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இந்த காரில் இரட்டை மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     


    இவை இணைந்து 575 ஹெச்.பி. பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. 

    • இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
    • பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் EV கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் 2025 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அல்ட்ரோஸ் EV மாடலின் இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட அல்ட்ரோஸ் EV மாடல் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நெக்சான், டியாகோ, டிகோர் மற்றும் பன்ச் உள்ளிட்ட மாடல்களால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார்களின் ஐ.சி. என்ஜின் வேரியன்ட் அதிக பிரபலமாக இருந்ததே இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

    டிசைன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், அல்ட்ரோஸ் மாடல் பெற்றிருக்கும் மிக சமீபத்திய அப்டேட்கள் அனைத்தும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரிலும் பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்களே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு இந்திய சந்தையில் வேறு எந்த மாடலும் போட்டிக்கு இல்லை.

    எதிர்காலத்தில் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் விலை அடிப்படையில் டாடா அல்ட்ரோஸ் EV மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    • டாடா பன்ச் EV மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய பன்ச் EV மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. டாடா பன்ச் EV விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா மோட்டார்ஸ்-இன் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.

     


    தோற்றத்தில் டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 90 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

     


    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது. டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் வெர்ஷனில் 7.2 கிலோவாட் ஏ.சி. ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 

    • டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • டாடா பன்ச் EV முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் எலெக்ட்ரிக் கார் விவரங்களை கடந்த வாரம் அறிவித்தது. தற்போது இந்த கார் ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படும் முதல் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.


     

    இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச்.EV மற்றும் பன்ச்.EV லாங் ரேன்ஜ் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இதன் லாங் ரேன்ஜ் வெர்ஷனுடன் 7.2 கிலோவாட் ஃபாஸ்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேன்ஜ் வெர்ஷன்களில் முறையே 25 கிலோவாட் ஹவர் மற்றும் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. 

    ×