search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வோக்ஸ்வேகன்"

    • வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் புதிய விலை விவரங்கள்:

    1.0 TSI கம்ஃபர்ட்லைன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 70 ஆயிரம் குறைந்து ரூ. 11 லட்சம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் ரூ. 75 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் (கூடுதல் அம்சங்களுடன்) ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG டீப் பிளாக் பியல் ரூ. 74 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 80 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) டீப் பிளாக் பியல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 1.1 லட்சம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. டைகுன் மாடல் டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்த சலுகைகள் இம்மமாத இறுதிவரை வழங்கப்படும்.
    • சலுகைகள் கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வோக்ஸ்வேகன் டுகன், விர்டுஸ் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகை மற்றும் பலன்கள் மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகின்றன. இதில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 30 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 60 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

    இந்த சலுகைகள் ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், பவர்டிரெயின் மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும். 

    • புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம்.
    • வோக்ஸ்வேகன் இந்தியா தலைமை செயல் அதிகாரி பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனம் முலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் வோக்ஸ்வேகன் நிறுவனம் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து பாரத் மொபிலிட்டி நிகழ்வில் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன யுக்தி எங்களது ஐ.சி. என்ஜின் மாடல்களுக்கான யுக்திகளை விட அதிக வித்தியாசமாக இருந்துவிடாது. இதனால், இந்திய சந்தைக்கு ஏற்றவகையிலும், சர்வதேச வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துவோம். புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும்."

    "எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக வோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் பல மில்லியன் யூரோக்கள் அடங்கிய பெரும் தொகை முதீலடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், புதிய வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பற்றி திட்டமிடுவோம்," என்று தெரிவித்தார்.

    • இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் உள்ளன.
    • ஸ்கோடா ஸ்லேவியா மாடலிலும் இதே அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சில வாரங்களுக்கு முன்பு டைகுன் டிரையல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சவுண்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் சவுண்ட் எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 52 ஆயிரம் என்று துவங்குகிறது. டைகுன் சவுண்ட் எடிஷன் விலை ரூ. 16 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல், இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சவுண்ட் எடிஷன்என்ற பெயருக்கு ஏற்றார் போல் இரு மாடல்களிலும் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்லிஃபயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. இதே போன்ற அம்சங்கள் இரு மாடல்களின் GT பிளஸ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ்வேகன் போன்றே ஸ்கோடா நிறுவனமும் தனது ஸ்லேவியா மாடலில் இதே அப்டேட்களை வழங்கி உள்ளது.

    இரு கார்களின் வெளிப்புற சி-பில்லர் மற்றும் கதவுகள் அருகே ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. டைகுன் மாடலில் காண்டிராஸ்ட் நிற ரூஃப் மற்றும் விங் மிரர்கள் வழங்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ், டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்கள்- லாவா புளூ, கார்பன் ஸ்டீல் கிரே, வைல்டு செர்ரி ரெட் மற்றும் ரைசிங் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.

    வோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் மாடல்களுக்கும், டைகுன் மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கும் போட்டியாக அமைகின்றன.

    • வோக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • சிறப்பு சலுகைகள் நவம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய வோக்ஸ்வேகன் கார் வாங்கும் போது தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 60 ஆயிரமும், ரொக்க பலன்களாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்க பலன்கள் ரூ. 40 ஆயிரமும், எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 

    இதே போன்று வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள் ரூ. 75 ஆயிரம் வரையிலும், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 75 ஆயிரமும், கார்ப்பரேட் பலன்கள் ரூ. 1 லட்சம் வரையிலும், விசேஷ பலன்களாக ரூ. 84 ஆயிரமும், ரூ. 86 ஆயிரம் மதிப்புள்ள நான்கு ஆண்டுகளுக்கான எஸ்.வி.பி. சேவையும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை 35 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    ×