என் மலர்
கார்

புதிய கார் வாங்க சூப்பர் சான்ஸ்... வோக்ஸ்வேகன் வெளியிட்ட வேறலெவல் அறிவிப்பு
- வோக்ஸ்வாகன் சமீபத்தில் இந்தியாவில் கோல்ஃப் GTI-யை அறிமுகப்படுத்தியது.
- 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
வோக்ஸ்வாகன் நிறுவனம் பிராண்டின் தேசிய எக்சேஞ்ச் திருவிழா- "வோக்ஸ்வாகன் ஆட்டோஃபெஸ்ட்" மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த வருடாந்திர நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாகனத்தை மேம்படுத்தவும், வோக்ஸ்வாகனின் பிரீமியம் பொறியியலை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள வோக்ஸ்வாகன் டீலர்ஷிப்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடக்கும் வோக்ஸ்வாகன் ஆட்டோஃபெஸ்ட், பிரத்யேக எக்சேஞ்ச் மற்றும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், வெகுமதிகள் மற்றும் விரிவான சேவை தொகுப்புகளை ஒன்றாகக் கொண்டுவருகிறது. இது வோக்ஸ்வாகனை காரை வீட்டிற்கு கொண்டுவர சிறந்த நேரமாக அமைகிறது.
வோக்ஸ்வாகன் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் நிதின் கோஹ்லி கூறுகையில், "வோக்ஸ்வாகன் ஆட்டோஃபெஸ்ட் என்பது வெறும் விற்பனை நிகழ்வு மட்டுமல்ல, இது அதைவிட பெரியது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்புடன் பிரீமியம் மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதியை வெளிப்படுத்தும் கொண்டாட்டம் ஆகும்."
"அது நேர்த்தியான விர்டுஸ், அற்புதமான டைகுன் அல்லது டிகுவான் ஆர் லைன் என எதுவாக இருந்தாலும், ஆட்டோஃபெஸ்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் ஓட்டுநர் அனுபவத்தை ஒப்பிடமுடியாத நன்மைகளுடன் மேம்படுத்த சரியான நுழைவாயிலை வழங்குகிறது" என்றார்.
வோக்ஸ்வாகனின் ஆட்டோஃபெஸ்ட் எக்ஸ்சேஞ்ச் திருவிழாவின் கீழ், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பயனர்கள் கவர்ச்சிகரமான எக்சேஞ்ச் மற்றும் லாயல்டி பலன்கள், சிறப்பு நிதி சலுகைகள், இலவச வாகன மதிப்பீடு மற்றும் டெஸ்ட் டிரைவ், சிறப்பு சேவை மற்றும் பராமரிப்பு சலுகைகளைப் பெறலாம்.
வோக்ஸ்வாகன் சமீபத்தில் இந்தியாவில் கோல்ஃப் GTI-யை அறிமுகப்படுத்தியது. இது 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 265 hp பவரையும் 370 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ரூ.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.