search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்"

    • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இரட்டை மோட்டார்கள் கொண்டுள்ளது.
    • ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2030 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக மாற ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் கொண்டிருக்கிறது. டிசைனை பொருத்தவரை ஸ்பெக்டர் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட பாந்தியன் முன்புற கிரில், ஸ்பிரிட் ஆஃப் எக்டசி, ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 21 இன்ச் ஏரோ டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     


    காரின் உள்புறம் டச் ஸ்கிரீன் கொண்ட அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பிரீமியம் இன்டீரியர், கதவு மற்றும் டேஷ்போர்டில் இலுமினேட் செய்யப்பட்ட பேனல்கள், இருக்கை மேற்கவர்களுக்கு ஏராளமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை 195 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இந்த காரில் இரட்டை மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     


    இவை இணைந்து 575 ஹெச்.பி. பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. 

    • இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டது.
    • சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம்.

    பிரிட்டனை சேர்ந்த உலகின் முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ். இதன் முதல் எலெக்ட்ரிக் கார் தான் ஸ்பெக்டர். சர்வதேச சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் இந்திய வெளியீடு இதுவரை நடைபெறவில்லை. எனினும், இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டு விட்டது.

    முற்றிலும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் சென்னையில் வினியோகம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. புகைப்படங்களின் படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் கனரக வாகனம் ஒன்றில் இருந்து தோட்டத்தில் இறக்கப்படுகிறது.

    சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இந்த எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் காரை யார் வாங்கியுள்ளார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இந்திய விலை ரூ. 9 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 577 ஹெச்.பி. வரையிலான திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    ×