என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு கார்கள்"

    • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

    அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

    கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

    கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.

    கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :

    மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி

    ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி

    ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி

    ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி

    பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி

    மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டில் 2023-24 ஆண்டு 8,475 சொகுசு கார்கள் விற்பனை.
    • கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட இது 46.2% அதிகம்.

    தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2019-2020 ஆம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2020-21ல் 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. பின்னர் 2021-22 ஆம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன.

    பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளது.

    இது கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2% அதிகமாகும்.

    2023-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் காட்களும் அடங்கும்.

    இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110 கார்களும் திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், சொகுசு கார்களை வாங்கும் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    புதுடெல்லி:

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.



    இதையடுத்து அவற்றை அடுத்த சில தினங்களில் மத்திய அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளன. ஓவியங்கள் மட்டுமே ரூ.57 கோடியே 72 லட்சம் மதிப்புடையவை என தகவல்கள் கூறுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், போர்ஸ், மெர்சிடஸ், டயோட்டா பார்ஜூனர் என 11 சொகுசு கார்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் விற்பனை தொகை, அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.    #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி நடக்கிறது. #Pakistan #LaxuryVehicles
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.63 ஆயிரம் கோடி) நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் பேசிய நிதி மந்திரி ஆசாத் உமர் தகவல் வெளியிட்டார். பாகிஸ்தானில் மாற்றங்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து உள்ள புதிய பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    முதலில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்தார். தனக்கு 2 ஊழியர்கள் போதும், 2 கார்கள் போதும் என கூறினார்.

    பாகிஸ்தான் பிரதமருக்கு நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவற்றில் விலை உயர்ந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் வாகனங்கள் 4, 2003-2013 மாடல் கார்கள் 8 அடங்கும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது.  #Pakistan #LaxuryVehicles 
    சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய 60 சொகுசு கார் மற்றும் பைக்குகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி, புல்டோசர் மூலம் அவற்றை நொறுக்கும் பணியை பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்டது.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அதிபராக உள்ள ரோட்ரிகோ டுடெர்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். போதை கடத்தலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட, ஐநா சபை கண்டனம் தெரிவித்தற்கு. ஐ.நா சபை தலைவரின் மண்டையை உடைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கேகேயான் மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.

    லம்போர்கினி, போர்ஸ்ச், மெர்ர்சீடெஸ் பென்ஸ், ஹார்லே டேவிட்சன் ஆகிய பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. பொதுவெளியில் வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது புல்டோசர் ஏறி நசுக்கியது. 

    இந்த காட்சியை அதிபர் டுடெர்டே ஹாயாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. (video courtesy Mail Online)


    ×