புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய ராம்சரண் - விலை எவ்வளவு கோடி தெரியுமா?

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய ராம்சரண் - விலை எவ்வளவு கோடி தெரியுமா?
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.

கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :

மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி

ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி

ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி

ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி

பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி

மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com