search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவிலேயே வெளியாகாத ரோல்ஸ் ராய்ஸ்.. சென்னையில் மாஸ் டெலிவரி.. விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவிலேயே வெளியாகாத ரோல்ஸ் ராய்ஸ்.. சென்னையில் மாஸ் டெலிவரி.. விலை எவ்வளவு தெரியுமா?

    • இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டது.
    • சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம்.

    பிரிட்டனை சேர்ந்த உலகின் முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ். இதன் முதல் எலெக்ட்ரிக் கார் தான் ஸ்பெக்டர். சர்வதேச சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் இந்திய வெளியீடு இதுவரை நடைபெறவில்லை. எனினும், இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டு விட்டது.

    முற்றிலும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் சென்னையில் வினியோகம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. புகைப்படங்களின் படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் கனரக வாகனம் ஒன்றில் இருந்து தோட்டத்தில் இறக்கப்படுகிறது.

    சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இந்த எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் காரை யார் வாங்கியுள்ளார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இந்திய விலை ரூ. 9 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 577 ஹெச்.பி. வரையிலான திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×