search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
    • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வட்டாட்சியரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்கு றிச்சி வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இப்போ ராட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தனித்துணை வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் அலவலகம், உள்ளிட்ட அனைத்து வரு வாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
    • தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கி ரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது.அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின்பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம்முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக ம் உள்ளே சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததுணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர்.

    ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்க ளுக்கும் போலீசா ருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்த்து றை அதிகாரிகள் கேட்டை தள்ளி திறந்து உள்ளே புகுந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகஅறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 149 பேரை போலீசார் நேற்று இரவு 8 . 30 மணியளவில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்பு நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் விடுவிக்க ப்பட்டனர். இவ்வாறு கள்ளக்குறிச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப டட்டனர். கள்ளக்கு றிச்சி யிலும் இன்று வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதனால் மாவட்ட ங்களில் உள்ள தாலுக்கா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் அதிகாரிகள் பணிக்கு வந்தும் எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இதனால் பொது மக்கள்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாரின் இடைக்கால பணிநீக்க த்தைரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்த நடவடி க்கைகளை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று (புதன்கிழமை)காலை 10 மணிக்கு திட்டக்குடி வருவா ய்த்து றை அலுவ லர்கள் வருகை பதிவேட்டில் கை யொப்ப மிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" உள்ளி ட்ட அனைத்து பணிகளையும் 100 சதவீதம் புறக்கணிப்பு செய்து திட்டக்குடி தாசில்தார் ரத்னகுமார், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் தாசில்தால் அலுவலகம் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போரா ட்டம் நடத்தி னர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.

    • கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • வங்கியின் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா்சம்மேளன துணைத் தலைவா்கோவிந்தன் தலைமை வகித்தாா்.

    போரா ட்டத்தைத் தொடங்கி வைத்து ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.

    இதில், நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வுதியம் வழங்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின்படி கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    அனைத்துத் தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தாமதமின்றி நடத்த வேண்டும்.

    வங்கி வாடிக்கையாளா்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

    நிறுத்திவைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில் அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    பணியாற்றும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாநிலச் செயலா் அன்பழகன் நிறைவுரையாற்றினாா்.

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைச்சாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஊதியமின்றி அல்லல் படும் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மற்ற சங்கங்களோடு இணைத்து ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பொதுப்பணி மாறுதல் திட்டத்தினை வகைபடுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும்.
    • முடிவில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்ட புள்ளியியல் துறையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்ட பணியா ளர்களில் சிலருக்கு மட்டும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டத்தின் சார்பில் தஞ்சை புள்ளிஇயல் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை தெற்கு வட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் . தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன், தொடக்க உரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்ட செயலாளர் அஜெய்ராஜ் , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் , தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர்அந்துவன்சேரல், உள்ளாட்சி தணிக்கை துறை மன்றம்அம்பேத்கர், நில அளவை அமைச்சு பணியாளர் சங்கம் முருகன், மாநில துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க அமைப்புசெயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்பு உரையாற்றினார் . அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்ரெங்கசாமி நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சௌரிராஜன் நன்றி கூறினார்.

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி. சங்கத்தின் பொருளாளர் தங்கையா தலைமை தாங்கினார்.

    எல்.பி.எப். சங்கம் இளங்கோ ,பி.எம்.எஸ். சங்கம் விஜயகுமார், சி.ஐ.டி.யு. துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். சங்க பீமராஜ், டி.யூ.சி.சி. சங்கம் வேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஜான், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மணிசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கனகசுந்தர், துணை பொதுச்செய லாளர் டி.கே. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து புறநகர் கிளையில் ஏற்க னவே கொடுத்து கொண்டு இருந்த பணி நேரத்தை குறைக்கக்கூடாது. அனைத்து பணி நேரங்க ளையும் பணி நேரமாக வழங்க வேண்டும். பணி குறைப்புக்கு வவுச்சராக வழங்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு ஊழியர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு னர்கள், எம். ஆர் .பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், ரவிச்சந்திரன், முருகன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பம் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்த லைவர் ரவிச்சந்திரன் பேரணியை தொடக்கி வைத்தார்.

    மாவட்டச் செயலாளர் ரங்கசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.

    இந்த பேரணியானது பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.

    இதில் மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரை ஆற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு
    • பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மண லிக்கரை இலங்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் நாயர் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலையில் ரத்த வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசேதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உடலை உறவினர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முன்னாள் ராணுவ வீரர் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என டாக்டரிடம் கூறியுள்ளனர்.

    அதற்கு டாக்டர் போலீஸ் வந்தால் தான் எங்களால் உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப முடியும் என கூறினார். இதனால் உறவினர்கள் கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் வராததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது எங்கள் பகுதியில் நடக்காததால் நாங்கள் வரமுடியாது என குலசேகரம் போலீசார் தெரிவித்தனர். இப்படியாக இறந்த ராணுவ வீரர் உடல் புறநோயாளிகள் பகுதியில் திறந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தது.

    இதை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொற்றிகோடு போலீசார் வந்து உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் இவரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×