search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் கைது"

    • தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது
    • போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 9 மணி அளவில் அலங்கியம் எல்.பி.பி. வாய்க்கால் பகுதியில் தமிழ்ச்செல்வன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து நம்பியூர் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கோபிசெட்டி பாளையம் சின்ன மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவர் தமிழ்ச்செல்வ னிடம் கடைசியாக 7 முறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பரமேஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு லாரி பார்சல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    மேலும் இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன், பரமேஸ்வ ரனின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமே ஸ்வரன் தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தற்கொலை க்கு தூண்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து நம்பியூர் போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்ப ட்டார். 

    பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மங்கலம்:

    மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த பனியன்கம்பெனியில் இருந்து சமீபத்தில் 6 நூல் பைகள் திருடு போனது. இது தொடர்பாக பனியன் கம்பெனி நிர்வாகிகத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பின்னர் மங்கலம் போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த மங்கலம் போலீசார் ராஜேஸ்குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது.
    • ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார் (வயது43).

    இந்த பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டபோது தாங்களுக்கு தெரியாது என்றும் கேசியரை தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    வேலை முடித்து சென்ற ஊழியர் ஹரின் என்பவரை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. பின்னர் மதியம் காஞ்சிக்கோயில் நால் ரோட்டில் நின்று கொண்டி ருந்த ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது போதையில் இன்று விடுமுறை என்ப தால் மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியு ள்ளார்.

    அவரிடம் பாக்கெட்டில் மீதம் இருந்த ரூ.1600 எடுத்து கொடுத்து கொண்டார். பின்னர் இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொட ர்பாக காஞ்சிக்கோயில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிந்து ஹரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
    • ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் அடூரில் பொது மருத்துவமனை அருகே தனியார் ஸ்கேன் மையம் உள்ளது.

    இங்கு தினமும் நோயாளிகள் வந்து ஸ்கேன் எடுப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த மையத்தில் ஊழியராக இருப்பவர் கொல்லம் கடக்கலைச் சேர்ந்த அஞ்சித் (வயது 34).

    இவர் ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, அஞ்சித் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவர் எவ்வளவு காலம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • சோதனையில் சூரியநாராயணன் கையில் இருந்த பையில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பகுதியில் சிறுத்தை தோலை சிலர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்து வைத்திருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சூரியநாராயணன் (வயது 42) என்பதும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து வனத்துறையினர், சூரியநாராயணன் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த தோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தையை வேட்டையாடி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்து, சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனர். சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி வைத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து வனத்துறையினர் சூரியநாராயணனை, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது, அது யாரிடம் விற்கப்பட இருந்தது என்பதை கண்டறிய வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊழியர் கைது
    • நிறுவனத்தின் காவலாளி, ஊழியரை பரிசோதனை செய்தார்.

    கோவை

    கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோகம் செய்ய இருந்த பொருட்களை பார்சல் செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நிறுவனத்தின் காவலாளி சங்கர் பரத்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மறைத்து திருடி செல்வது தெரியவந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனே மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டசிடம் தெரிவித்தார். அவர் அங்கு வந்து சங்கர் பரத்தை கண்டித்து விசாரித்தார். அதில் அவர் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மேலாளர், ஊழியர் சங்கர் பரத்தை பிடித்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் பரத் கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய செல்போனை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.

    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பல்லாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

    அவர்கள் தங்களின் குழந்தைக்கு தண்ணீர் மந்திரித்து தெளிப்பதற்காக, அருகில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையைத் தூக்கி சென்றனர். அங்கு, தண்ணீர் மந்திரித்துத் தெளிக்கும் ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்ணிடம் உனது கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நீ மட்டும் உள்ளே வா என்றார்.

    அதன்படி இளம்பெண் கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலத்துக்குள் சென்றார்.

    அப்போது வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வழிபாட்டுத்தல ஊழியரை கைது செய்தார்.

    • திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த பதிவறை எழுத்தர் சிவஞான வேலு என்பவரிடம் தனது தாயார் கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவில் தன் தாயின் பெயர் கிராம, வட்ட கணக்கில் திருத்தம் செய்வதற்காக 2007 பதிவேடுகளை எடுத்து தர கூறினார்.இதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேலு ரூ. 5 ஆயிரம் யுவராஜிடம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த யுவராஜ்இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்தனர்.இந்த ரூபாய் நோட்டுகளை அவர் பதிவறை எழுத்தர் ஞானவேலுவிடம் கொடுத்தார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர் லஞ்சமாக கேட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து அவர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.



    ×