search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரத்தொழிற்சாலை"

    • வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், பெரிய குப்பத்தில் செயல்படும் தனியார் உரத்தொழிற் சாலையில் இருந்து கடந்த 26-ந்தேதி நள்ளிரவு திடீரென அமோனியாக வாயு கசிவு ஏற்பட்டது.

    அதிக அளவு காற்றில் கலந்ததால் பெரியகுப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்களுக்கு மயக்கம், கண்எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கடல் நீரிலும் அமோனியா வாயு கலந்ததால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

    அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட 45 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 6 பேர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உரத்தொழிற்சாலைக்கு எதிராக மீனவகிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடுதிரும்பிய நிலையில் பெரியகுப்பத்தை சேர்ந்த வனஜா(40), சூரிய காந்தி(70) ஆகிய 2 பேர் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து மீனவ கிராம நிர்வாகி ஒருவர் கூறும்போது, உரத்தொழிற் சாலையை 2-ந்தேதி திறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் தொழிற்சாலை முன்பு மிகப்பெரியபோராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமத்தினரிடமும் ஆதரவு கேட்கப்படுகிறது என்றார்.

    இதற்கிடையே அமோனியா வாயுகசிவுக்கு காரணமான உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தொழிற்சாலை வாசலில் தொடர்ந்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று அமர்ந்து உள்ளனர். இந்தநிலையில் மீன வர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.

    எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • சிறுமுகை இலுப்பநத்தம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 4 நாட்களுக்கு தொழிற்சாலை செயல்பட தடை விதித்து தாசில்தார் மாலதி உத்தரவிட்டார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சருமநோய் கூட ஏற்படுவதாக குற்றம்சாட்டி இந்த காளான் உரத்தொழிற் சாலையிலையை மூட வேண்டும் என கடந்த ஓராண்டாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று தொழிற்சாலைக்கு உரம் தயாரிக்க மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து சிறுமுகை இலுப்பநத்தம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வந்து தங்களக்கு உரிய தீர்வு காணும் வரை லாரியை செல்ல அனுமதிக்கமாட்டோம் என போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி மற்றும் சிறுமுகை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தாசில்தார் மாலதி உறுதி செய்ய ப்பட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சோதனை நடத்த பரிந்துரை செய்ததுடன் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு அறிக்கை வரும் வரை 4 நாட்களுக்கு தொழிற்சாலை செயல்பட தடை விதித்து தாசில்தார் மாலதி உத்தரவிட்டார். தாசில்தாரின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் அறிவிப்பை மீறி செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார்.

    இந்நிலையில் இன்று காலை மீண்டும் காளான் உரத் தொழிற்சாலையில் லாரியில் எடுத்து வரப்பட்ட மூலப் பொருட்களை இறக்கி வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கிராம மக்கள் மீண்டும் தொழிற்சாலையின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் தாசில்தார் மாலதி தொழிற்சாலைக்கு 4 நாட்களுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×