search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ammonia gas leak"

    • வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், பெரிய குப்பத்தில் செயல்படும் தனியார் உரத்தொழிற் சாலையில் இருந்து கடந்த 26-ந்தேதி நள்ளிரவு திடீரென அமோனியாக வாயு கசிவு ஏற்பட்டது.

    அதிக அளவு காற்றில் கலந்ததால் பெரியகுப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்களுக்கு மயக்கம், கண்எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கடல் நீரிலும் அமோனியா வாயு கலந்ததால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

    அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட 45 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 6 பேர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உரத்தொழிற்சாலைக்கு எதிராக மீனவகிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடுதிரும்பிய நிலையில் பெரியகுப்பத்தை சேர்ந்த வனஜா(40), சூரிய காந்தி(70) ஆகிய 2 பேர் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து மீனவ கிராம நிர்வாகி ஒருவர் கூறும்போது, உரத்தொழிற் சாலையை 2-ந்தேதி திறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் தொழிற்சாலை முன்பு மிகப்பெரியபோராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமத்தினரிடமும் ஆதரவு கேட்கப்படுகிறது என்றார்.

    இதற்கிடையே அமோனியா வாயுகசிவுக்கு காரணமான உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தொழிற்சாலை வாசலில் தொடர்ந்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று அமர்ந்து உள்ளனர். இந்தநிலையில் மீன வர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×