என் மலர்
இந்தியா

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு.. உள்ளே சிக்கிய 30 தொழிலாளர்களை சுவரை உடைத்து மீட்ட தீயணைப்பு படை
- தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
- வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சர்ஜிக்கல் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பால் உற்பத்தி ஆலையில் நேற்று மாலை அம்மோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலையில் வாயு கசிந்ததை அடுத்து, அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க ஆலையின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கிருந்து சுமார் 30 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, ஆலையின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் கசிவு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






