search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்குடி"

    • வாரச்சந்தையை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை உடன்குடி மெயின் பஜாரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திங்கட்கிழமை தோறும் செயல்படும் இந்த சந்தையில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வருவார்கள்.

    சுற்றுபுறபகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை முதல் இரவு வரை வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வார்கள்.

    இந்த வாரச்சந்தையை நவீனமாடலில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று இங்கு வரும் வியாபாரி களும், பொதுமக்களும், கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஏற்பாட்டில் ரூ1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க விழாவும்நடந்தது.

    தற்போது கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணியை உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி தொடங்கப்பட்டது. இப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இப்பணியை விரைவில் முடித்து திறப்பு விழாநடத்த வேண்டும் என்று அமைச்சரும், பேரூராட்சி நிர்வாகமும் மிகுந்தஆவலாய் உள்ளது.

    எனவே இப்பணி விரை வில் முடியும் என்றார். அப்போது, கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், சரஸ்வதி பங்காளர், பிரதீப் கண்ணன், ராஜேந்தி ரன், முத்துசந்திராசிவா, அன்புராணி, சரஸ்வதி மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி ஊழி யர்கள் உடன் சென்றனர்.

    • ராசா சுடலைமுத்து விழாவிற்கு தலைமை தாங்கினார்.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் தமிழகத்தில் 280 கிராமங்களில் இலவசமாக யோகா கற்றுத்தரும் கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு 257 கிராமங்களில் நிறைவு பெற்றுள்ளது. 258-வது கிராமமாக பயிற்சிகளை நிறைவு செய்து ஆரோக்கியமான அமைதி கிராமமாக மாற்றப்பட்ட உடன்குடி தேரியூரில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் விருதுநகர் மண்டல தலைவர் ராசா சுடலைமுத்து தலைமை தாங்கினார். சங்க இயக்குநர் ஜானகிராமன், இணை இயக்குநர் பாலமுருகன், உடன்குடி மனவளக்கலை மன்ற தலைவர் இசக்கியப்பன், துணைத்தலைவர் செல்வகுமார், தலைமை பொறுப்பாசிரியர் சங்கரவடிவேல், திருமுருகன் கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம சேவைத் திட்ட இயக்குநர் முருகானந்தம், தேரியூர் ஊர் தலைவர் சிவ நடராஜன், ஆகியோர் பேசினார்கள். சேவைத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களின் அனுப வங்கள், ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், படக் காட்சிகள், நூல் கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்க தலைவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மயிலானந்தன், காணொலிக் காட்சியில் பங்கேற்று நிறைவுரையாற்றினார். சேவைத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட யோகாப் பயிற்சிகள், மனநல மருத்துவ முறைகள், மரம் வளர்த்தல், சுற்றுப்புற சுகாதாரம், ஆரோக்கிய மேம்பாடு, மாணவர்களுக்கான திறனூக்கப் பயிற்சிகள் ஆகியவற்றை தினமும் கடைபிடிக்க உறுதி எடுக்கப்பட்டது. மனவளக்கலை மன்ற செயலர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

    • உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.
    • சாதனை புரிந்த 5 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின விழாவையொட்டி உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது. தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் நகர தலைவி மங்களச் செல்வி, மாவட்ட பொதுச் செயலாளர் ஆக்னல் ரிஹானா, திருச்செந்தூர் வட்டார தலைவி பட்டு கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மகிளாஇணைச் செயலாளரும், உடன்குடி டவுன் கவுன்சிலருமான அன்பு ராணி வரவேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 5 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திரா காந்தி விருது வழங்கி கவுரவித்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ., டேனியல் ராஜ், மாநில வக்கீல் பிரிவு துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயலாளர் பியூலா விஜயராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் (தெற்கு) வட்டார தலைவர் லூர்து மணி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் மற்றும் நேசபுரம் முத்துகுமார், ஹென்றி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட மகிளா காங்கிரஸ் பொருளாளர் சுலோச்சனா நன்றி கூறினார்.

    • தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது.
    • உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் உள்ளிட்டோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 5,070 பேருக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடிமேற்குஓன்றிய செயலாளருமான பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செய லாளர் பார்த்திபன், மாநில பிரசாரக்குழு துணை செயலர் ஜெசிபொன்ராணி, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர்அஸ்ஸாப் ஆ லிபாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் செந்தில், மாடசாமி, கோமதிநாயகம், ஓன்றிய இளைஞரணி துணை செயலர் மனோஜ், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, ஓன்றிய துணை செயலர் இந்திரா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தமிழ் அழகன், திருசெந்தூர் ஓன்றிய துணை செயலர் அமிர்தலிங்கம், வீரமணி, கிளை நிர்வாகிகள் கணேசன், பூங்குமார், பொன்விங்கம், அரிச்சந்திரன், ரவி, குமார், மகேஸ்வரி, முத்துக்குமார், மோகன், இசக்கிமுத்து, முத்துக்குட்டி, சுபிதா, தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

    • அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது.
    • பக்தர்களுக்கு பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    நெல்லையில் உள்ள அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது. உடன்குடி பஜார், கொட்டங்காடு, சந்தையடியூர் உள்ளிட்ட பகுதிகளில் பவனி வந்த ரதத்திற்கு இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில செயலர் பாலன், தொழிலதிபர் மகேந்திரன், பா.ஜ.க. தொழிற்சங்க நிர்வாகி அப்பாத்துரை ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    உலக நாடுகளில் போர் பதட்டம் இன்றி அமைதி நிலவவும், நாட்டில் நன்கு மழை பெய்து விவசாயம், தொழில்வளம், வியாபாரம் பெருகவும் வேண்டி சிறப்பு பஜனைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது. பரமன்குறிச்சியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வருகிற 21-ந்தேதி சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மெஞ்ஞானபுரம் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டு கொண்டான்மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமி புரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி,

    கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி மற்றும் உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் காலை 8மணி முதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனில் ரூ1.68கோடி மதிப்பீட்டில் 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடஙகப்பட்டது. உடன்குடி யூனியனுக்குட்பட்ட ராமசாமிபுரம், தைக்காவூர், செம்மறிக்குளம், குமாரசாமிபுரம், சிவலூர், அத்தியடிதட்டு ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பபள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.28லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய கட்டிடங்கள் கட்டிட முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பள்ளிகட்டிடங்கள் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு பணிகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாண்சிராணி, பொறியாளர் ஜெயபால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • றி.டி.றி.ஏ. பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் றி.டி.றி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார் முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியளாள், வட்டாரகல்வி அலுவலர் ஜெயவதி ரத்னா வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி, தலைமைஆசிரியர் லிவிங்ஸ்டன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதவி, ரெயில் மற்றும் போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெற பதவி, உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி தலைமையில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரி யர்கள் செய்திருந்தனர்.

    • மானாடு தண்டுபத்து சுதந்திர நகர் பள்ளியில் “உலக ஈரநில தினம்” கொண்டாடப்பட்டது.
    • ஈர நிலத்தை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு குறித்து அபிராமி பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் மானாடு தண்டுபத்து சுதந்திர நகர் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் "உலக ஈரநில தினம்" கொண்டா டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஈர நிலம் பூமிக்கு ஆற்றும் பங்கு குறித்து மாணவ- மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், ஈர நிலத்தை பாதுகாப்பதின் அவசியத்தையும் அது குறைவதால் ஏற்படும் தீமைகளையும், ஈர நிலத்தை பாதிக்கும் காரணிகளை போக்கும் வழிமுறை களையும் மாணவர்கள் அறியும் வகையில் அறிவியல் ஆசிரியர் நடராஜ் பேசினார். ஈர நிலத்தை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்று அபிராமி பேசினார். தொடந்து ஆசிரியர்கள் முருகன், வசந்தா, முருகலட்சுமி ஆகியோர் ஈரநிலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இறுதியில் ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெயராஜ் செய்திருந்தார்.

    • கடந்தாண்டு உடன்குடி வட்டார பகுதியில் அனைத்து குளங்களும் முழுமையாக நிறைந்தது.
    • குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கடந்தாண்டு புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள்மற்றும் வழக்கமான குளங்கள் எல்லாம் முழுமையாக நிறைந்து கடலுக்கு கருமேனி ஆறு வழியாக தண்ணீர்சென்றது.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல இந்த ஆண்டும் பருவமழை வரும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பும், விவசாய நிலங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை விறுவிறுப்பாக தொடங்கி விவசாய பணிகளை செய்தார்கள். ஆனால் மழையும் வரவில்லை, குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வரவும் இல்லை, இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இனியும் மழை வருமா? விவசாய நிலங்களில் கடல் நீர் மட்டம் ஊடுருவி தண்ணீர் எல்லாம் உப்பாக மாறிவிடுமோ? விவசாய பயிர்கள் காப்பாற்றப்படுமா? என்று கவலையில் உள்ளனர்.

    • 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.
    • குளங்கள் முழுமையாக நிரம்புவதற்காக பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி -திருச்செந்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் தலைமையில் 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.

    தைக்காவூர், அம்மன் புரம், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை, வடக்குதெரு, பிச்சி விளைபுதூர்.கந்தசாமிபுரம், காயாமொழி தெற்குதெரு, சீருடையார்புரம் கரிசன் விளை, சத்யாநகர், ராமசுப்பிரமணியபுரம் உட்பட 11 கிராமங்களில் பூமாதேவி ஆகிய பாரத மாதாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள வறண்டு கிடக்கும் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புவதற்கு வர்ண பகவான் அருள்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் நோய் நொடிகள் இல்லாமலும் தடைபட்ட செயல்கள் நீங்கவும், பூமியில்நல்ல விளைச்சல் உண்டாகவும், பாரத தேசம் செழிக்க வேண்டும் என்றும் பாரத தாயிடம் வழிபாடு செய்யப்பட்டது.

    இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் சுயம்புகனி, சித்ரா, மணிமேகலை, சிவகுமாரி, சக்திகனி, தங்கேஸ்வரி, பட்டு ரோஜா, சரஸ்வதி, முத்துக்கனி, செல்வகுமாரி, அமுதா, பவித்திரசித்தா, வளர்மதி, தாமரைச்செல்வி.வன சுந்தரி, தங்கச்செல்வி, சூரியகலா, சிங்கார கனி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, பூஜா, அமுதசுரபி, மல்லிகா,செல்வி உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • 2 பஸ்களையும் மாற்று பாதையில் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தமிழகமீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் பள்ளி, ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்களில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள்மிகுந்த சிரமப்படு கின்றனர்.

    மேலும் புகழ் பெற்ற கூழையன் குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பக்தர்கள் பஸ் வசதி இல்லாததால் உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து கோவிலுக்கு செல்கின்றனர்.

    பொது மக்கள், பக்தர்களின் நலன் கருதி உடன்குடி - பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் தைக்காவூரில் இருந்து வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் வழியாக உடன்குடி - செட்டியாபத்து மெயின் ரோட்டுக்கு வந்து உடன்குடி பஸ் நிலையம் செல்லும் வகையில் பஸ்களைஇயக்க வேண்டும்.

    குறிப்பாக உடன்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் தடம் எண் 61 டி திருச்செந்தூரில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும், உடன்குடியில் இருந்து காலை 9.30 மணி, மாலை 4.10 மணிக்கும் புறப்படுகிறது. இது போன்று அரசு பஸ் தடம் எண் 62 பி திருச்செந்தூரில் இருந்து மாலை 3.15 மணி, உடன்குடியில் இருந்து மாலை 4.30 மணிக்கும் புறப்படுகிறது.இந்த 2 அரசு பஸ்களை மேற்குறிப்பிட்டுள்ள 2 கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்படி பஸ்களை இயக்குவதால் சுமார் 15 ஆண்டு காலமாக எந்த வித பஸ்வசதியும் இல்லாத இரு கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்கும்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக 2 பஸ்களையும் மாற்று பாதையில்இயக்கி 15 வருடமாக பஸ் வசதி இல்லாத ஊருக்கு பஸ் வசதி கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×