search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி-திருச்செந்தூர் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்  நிரம்ப வேண்டி சிறப்பு வழிபாடு
    X

    தைக்காவூரில் மழை வேண்டி பாரத மாதா படம் வைத்து வழிபாடு செய்த காட்சி.

    உடன்குடி-திருச்செந்தூர் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள் நிரம்ப வேண்டி சிறப்பு வழிபாடு

    • 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.
    • குளங்கள் முழுமையாக நிரம்புவதற்காக பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி -திருச்செந்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் தலைமையில் 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.

    தைக்காவூர், அம்மன் புரம், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை, வடக்குதெரு, பிச்சி விளைபுதூர்.கந்தசாமிபுரம், காயாமொழி தெற்குதெரு, சீருடையார்புரம் கரிசன் விளை, சத்யாநகர், ராமசுப்பிரமணியபுரம் உட்பட 11 கிராமங்களில் பூமாதேவி ஆகிய பாரத மாதாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள வறண்டு கிடக்கும் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புவதற்கு வர்ண பகவான் அருள்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் நோய் நொடிகள் இல்லாமலும் தடைபட்ட செயல்கள் நீங்கவும், பூமியில்நல்ல விளைச்சல் உண்டாகவும், பாரத தேசம் செழிக்க வேண்டும் என்றும் பாரத தாயிடம் வழிபாடு செய்யப்பட்டது.

    இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் சுயம்புகனி, சித்ரா, மணிமேகலை, சிவகுமாரி, சக்திகனி, தங்கேஸ்வரி, பட்டு ரோஜா, சரஸ்வதி, முத்துக்கனி, செல்வகுமாரி, அமுதா, பவித்திரசித்தா, வளர்மதி, தாமரைச்செல்வி.வன சுந்தரி, தங்கச்செல்வி, சூரியகலா, சிங்கார கனி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, பூஜா, அமுதசுரபி, மல்லிகா,செல்வி உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×