search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் காசா போர்"

    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவப்படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்.

    லெபனான் தாக்குதலில் பலியானவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (31) என்றும், இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கம்.
    • இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

    காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் மத்திய கிழக்கில் நடத்திய தாக்குதல் மற்றும் அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்களால் மனித குலம் எதிர்கொள்ளும் இழப்புகளை கண்டு பெரிதும் வருந்துகிறேன். இதில் பலர் கொல்லப்பட்டு விட்டனர்."

    "நான், மற்றவர்களை போன்றே, இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • இப்போரினால் காசா பகுதியில் சுமார் 25,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
    • அமெரிக்காவிடம் தனது நிலைப்பாட்டை கூறி விட்டதாக நேதன்யாகு தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவ படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.

    சில தினங்களுக்கு முன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

    நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஹமாஸ் அழிய வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணய கைதிகள் மீண்டும் ஓப்படைக்க பட வேண்டும்.

    எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும். போர் இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம்.

    ஜோர்டான் நதிக்கு (River Jordan) மேற்கே உள்ள நில பகுதி முழுவதிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பாலஸ்தீனத்தையும் சேர்த்தே குறிக்கும்.

    இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானதுதான்.

    இந்த உண்மையை அமெரிக்க நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என கூறி விட்டேன்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    பணய கைதிகளை மீட்டு தனது நாட்டிற்கு கொண்டு வருவதற்குத்தான் நேதன்யாகு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, ஹமாஸை அழிப்பதில் காலம் கடத்த கூடாது என இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • காசாவுக்கு உயிர் காக்கும் அத்தியாவசிய பொருள்களை அனுப்பி வைத்தது இந்தியா
    • இந்திய மக்களின் அன்புப் பரிசு என பதிவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள், பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்று வரை காசாவில் 4,385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் 13,561 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா இன்று அனுப்பியுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல் கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய மக்களின் அன்புப் பரிசு என பதிவிட்டுள்ளார்.

    ×