search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள குமாரபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுஜித் (வயது24). இவர் இரணியல் அருகே உள்ள ஒரு பேண்ட் செட் குழுவில் சிங்காரி மேளம் இசைத்து வந்தார். சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சுஜித் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    பாலப்பள்ளம் அருகே உள்ள வழுதலம்பள்ளம் ஒப்பிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி பகவதி (வயது 65). இவர் நேற்று திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து பேருந்தில் மணவாளக்குறிச்சிக்கு சென்றார்.

    அப்போது மாங்குழி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும்போது பகவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பஸ்சில் தேடி பார்த்தார். எனினும் செயின் கிடைக்கவில்லை. பகவதியிடம் இருந்து யாரோ மர்ம நபர் செயினை திருடி சென்று விட்டனர். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காப்பாற்றச் சென்ற கணவருக்கும் காயம்
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோயில் நடுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 35). இவரது மனைவி மாரிபொண்ணு(26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.

    நேற்று காலை மாரி பொண்ணு சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் எண்ணை கேன், மாரிபொண்ணு மீது விழுந்ததால் அவர் மீதும் தீப்பிடித்தது.

    இதனால் தீக்காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் சண்முகராஜ் ஓடி வந்தார். அவர் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது கை, நெஞ்சு, முகம் ஆகிய பகுதிகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரையும் மாரிப் பொண்ணுவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சண்முகராஜ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்த னைக்காக பலரும் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

    அவர் தீடிரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் (வயது 50) என்பதும் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார் என்பதும் தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர விசாரணை
    • மன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலையா (வயது 85). இவரது மனைவி செல்லம் (77).

    இவர்களுக்கு சந்திரசேகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அவர்கள் தனித்தனியாக வசிப்பதால், பாலையா தனது மனைவி செல்லத்துடன் தனியாக வசித்து வந்தார்.

    வயதான தம்பதியரான அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தனர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலையா வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பாலையா வீட்டுக்குச் சென்று அழைத்துப் பார்த்தார். அப்போது வீட்டு க்குள் இருந்து எந்த சத்த மும் வரவில்லை. எனவே கதவை தட்ட முயன்ற போது, அது திறந்தே கிடந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு பாலையாவும் அவரது மனைவி செல்லமும் ஜன்ன லில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது.

    போலீசார் விரைந்து வந்து, பாலையா மற்றும் அவரது மனைவி செல்லம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலையாவின் மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பாலையா மற்றும் செல்லம் மன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மாங்குழி என்ற இடத்தை சேர்ந்த வர் ரவிராஜ் (வயது48). இவரது மனைவி வளர்மதி (44). இவர்கள் மகள் ரீனாசிங்(19).

    வெள்ளி சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்து கொண்டு ரீனாசிங் மாயம் ஆனதாக தெரிகிறது. இது குறித்து அவரது தாயார் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    • இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
    • மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற தாணிவேல் (வயது 49). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் அப்பகுதி யில் உள்ள பாறைகுளம் கரையில் இருந்துள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கிய அவரை அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடி உள்ளனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த திங்கள்நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் சம்ப இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தாணிவேலை தேடினர். இரவு நெருங்கியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் லைட்களை எரியவிட்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரணியல் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், கக்கோட்டுத் தலை கிராம நிர்வாக அதிகாரி ராதா, இரணியல் தனிப்பிரிவு ஏட்டு சுஜின் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

    தொடர்ந்து இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். குளத்தில் தொழி லாளி மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
    • கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

    உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.

    அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
    • சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

    கன்னியாகுமரி:

    இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி க்கூடம், மருத்துவமனை என்று பொது மக்கள் வந்து செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அகற்ற கோரி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார், இரணியல் பஞ்சாயத்து செயல் அலுவலர் லெட்சுமி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குதிரைப்பந்திவிளையைச் சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மனைவி சரஸ்வதி (வயது 70). சரஸ்வதிக்கு சர்க்கரை நோய் இருந்து வந்ததாகவும், அதற்காக தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. கடந்த 25-ந் தேதி சர்க்கரை மாத்திரை சாப்பிட்டதும் வெற்றிலை போட்டதால் வாயில் நுரை தள்ளிய நிலையில் சரஸ்வதி மயங்கி விழுந்துள்ளார்‌. உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் (43) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெய்யூர் ஹாக்கர் தெருவினை சேர்ந்தவர் பிறைட் சாலமன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஏதோ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டின் அருகே உயிருக்கு போராடியபடி கிடந்ததாக தெரிகிறது.

    உறவினர்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிறைட் சாலமன் உயிர் இழந்தார். இது குறித்து அவரது மருமகன் ஜெரின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×