இரணியல் அருகே உடல் நலக் குறைவால் தம்பதி தற்கொலை செய்தார்களா?

போலீசார் தீவிர விசாரணைமன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்
பாலையா
பாலையா
Published on
<p>செல்லம்</p>

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலையா (வயது 85). இவரது மனைவி செல்லம் (77).

இவர்களுக்கு சந்திரசேகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அவர்கள் தனித்தனியாக வசிப்பதால், பாலையா தனது மனைவி செல்லத்துடன் தனியாக வசித்து வந்தார்.

வயதான தம்பதியரான அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தனர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலையா வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

இதனால் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பாலையா வீட்டுக்குச் சென்று அழைத்துப் பார்த்தார். அப்போது வீட்டு க்குள் இருந்து எந்த சத்த மும் வரவில்லை. எனவே கதவை தட்ட முயன்ற போது, அது திறந்தே கிடந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு பாலையாவும் அவரது மனைவி செல்லமும் ஜன்ன லில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது.

போலீசார் விரைந்து வந்து, பாலையா மற்றும் அவரது மனைவி செல்லம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலையாவின் மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பாலையா மற்றும் செல்லம் மன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com