search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாச்சல பிரதேசம்"

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

    பிலாஸ்பூர்:

    பிரதமர் மோடி நாளை மறுநாள் (5-ந் தேதி) இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்று பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.
    • 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வந்தது.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்தி மற்றும் எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசினர். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்தனர்.

    தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் அமைச்சர்கள் பேசினர். அப்போது, எதிர்க்கட்சிகள் உறுதியான பிரச்சனைகளை கொண்டு வரத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பேசும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

    68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். இவர்கள் தவிர 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 மாணவர்கள் காயமடைந்தனர்.#HPAccident #BusOverturned
    ஷிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தரம்சாலாவில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும் மாணவர்கள் ஒரு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். 

    இந்த பஸ், கங்ரா மாவட்டம் ஜவாலி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

    இந்த விபத்தில் 35 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HPAccident #BusOverturned
    இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கி மாயமானதாக கூறப்பட்ட 35 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. #HimachalFloods #HimachalRains
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து 35 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த 35 மாணவர்களும் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

    மேலும், 20 பேரும் நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாயமான மாணவர்கள் உள்பட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.
    ×