என் மலர்
நீங்கள் தேடியது "bus overturned"
- வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
- கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தபஸ் அயோத்தியாப்பட்டிணம் அடுத்த ராமலிங்கபுரம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த செல்லியம்பாளையம் கலா, டி.பெருமாபாளையம் அர்ஜுனன் இவரது மனைவி வெண்ணிலா, சின்ன கவுண்டாபுரம் போதாம்பு, சேசன்சாவடி நடராஜன், வேப்பிலைப்பட்டி ஆனந்தகுமார், அதிகாரிப்பட்டி சிவக்குமார், நீர்முள்ளிக்குட்டை சுப்பிரமணி, பெத்தநாயக்கன்பாளையம் பழனிவேல், வாழப்பாடி கமலா உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
- இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக புதுக்கோட்டை வரை செல்லும் தனியார் பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததுள்ளது. மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






