search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்"

    இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து துணை பயிற்சியாளர் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் 97 ரன்கள் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த விராட் கோலி, 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். கடந்த 2014 சீசனில் ஐந்து டெஸ்டில் 134 ரன்கள் மட்டுமே அடித்த விராட் கோலி, இந்த சீசனில் மூன்று டெஸ்டில் இரண்டு சதம், இரண்டு அரைசதங்களுடன் 440 ரன்கள் குவித்துள்ளார்.

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்ட விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அணி துணைப் பயிற்சியாளர் பால் பேர்பிரேஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இங்கிலாந்து துணை பயிற்சியாயர் பால் பேர்பிரேஸ் கூறுகையில் ‘‘இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, அவருடைய ஆட்டத்தை மேம்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதேபோல் ஒரு வீரர் விளையாடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது. அவர் ஹை-கோலிட்டி வீரர். இந்த தொடரில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய யுக்தி, பயிற்சி, போட்டியில் அவருடைய ஈடுபாடு இந்த ரன்களை குவிக்க தகுதியானது.



    மற்ற வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் மிகப்பெரிய அளவில் நம்புகிறேன். ஆகவே, சிறந்த வீரர்களாக நீங்கள் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், சிறந்த வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    எங்களுடைய பந்து வீச்சாளர்கள் ஏராளமான சான்ஸ் விராட் கோலிக்கு கிடைத்தது என்கிறார்கள். ஆனால் ஹை-கோலிட்டி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 3-வது நாள் காலை முழுவதும் விராட் கோலி மற்றும் புஜாரா விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடினார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்று காலை விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது. தற்போது வரை இந்தியா 362 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    மதிய உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட் வீழ்த்திய நாங்கள் மத்தியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்து விட்டோம் என கிறிஸ் வோக்ஸ் கூறினார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.

    அதன்பின் விராட் கோலியுடன் துணைக் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 2-வது செசன் முழுவதும் விளையாடினார்கள். இது இங்கிலாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது. இந்நிலையில் முதல்நாள் ஆட்டம் மிடில் பகுதியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் நாங்கள் திணறி விட்டோம் என்று கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘முதல் நாள் முழுவதும் பந்து மூவ் ஆனது. ஆனால், நாங்கள் மிடில் பகுதியில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க திணறி விட்டோம்.

    டாஸ் வென்று முதலில் பந்து வீசும்போது, இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
    இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகியுள்ள ரிஷப் பந்த் சிக்சருடன் டெஸ்ட் ஸ்கோரை தொடங்கி சாதனைப் படைத்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 20 வயதே ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அறிமுகமானார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 97 ரன்னில் ஆட்டமிழந்ததும், ரிஷப் பந்த் களம் இறங்கினார்.

    அப்போது அடில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்தை தடுத்தாடிய ரிஷப் பந்த், அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் சிக்ஸ் மூலம் ரன் கணக்கை தொடங்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் 11 பேர் இந்த சாதனையைப் பெற்றுள்ளனர்.



    நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 32 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
    பேட்டிங், பவுலிங்கில் மிகுந்த திறன் இல்லாததால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஆல்ரவுண்டர் அல்ல என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஹோல்டிங் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். அவர் காலத்திற்குப் பிறகு இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை உருவாக்கியதில்லை. இந்நிலையில்தான் பிசிசிஐ கண்ணில் ஹர்திக் பாண்டியா தென்பட்டார்.

    சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கும் இவர்தான் இந்தியாவின் அடுத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என முன்னிலை நிறுத்தப்பட்டார். ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் இதுவரை முடிந்துள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். பந்து வீச்சிலும் சோபிக்கவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனம் எழும்பி வருகிறது. இந்நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஆல்ரவுண்டர் இல்லை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவின் அட்டக் சரியான பேலன்ஸ் ஆக இல்லை. ஹர்திக் பாண்டியாவை பந்து வீச்சு உதவிக்காக வைத்துக் கொண்டு இந்தியா விளையாடுகிறது. அவர் பந்து வீசும்போது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், தொடர்ச்சியாக சதம் அடிக்காவிடிலும், 60 அல்லது 70 ரன்கள் அடிக்க வேண்டும். அப்படி அடித்து இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் சந்தோசம்.



    ஆனால் அவரால் ரன்களும் அடிக்க முடியவில்லை, இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்த வாய்ப்பு வழங்கினாலும், அவரால் விக்கெட் வீழ்த்த இயலவில்லை. அவர் தொடர்ந்து சீரான பந்து வீச்சை வெளிப்படுத்துவதில்லை. பந்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்து பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைக்க முடியவில்லை.

    ஒன்றிரண்டு சிறந்த பந்துகளை வீசலாம், இருந்தாலும், பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைப்பது அவசியம். உலகத்தின் எந்தவொரு பகுதியில் முன்னணி பந்து வீச்சாளராக செல்ல வேண்டும், கேப்டன் உங்களை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால், சரியான திசையில் பந்து வீச வேண்டும், அதன் மூலம் விக்கெட்டுக்களை கைப்பற்றி, கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இது அவரிடம் இல்லை என்பது என்னுடைய கணிப்பு’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வீரர்களின் இடத்திற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க இயலாது. வெற்றி ஒன்றே நோக்கம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் நாளை 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோதான் இந்தியாவில் தொடரை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் இந்தியா வெற்றிக்காகவே விளையாடும்.

    முதல் இரண்டு டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும். வீரர்கள் அவரவர்கள் வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு உத்தரவாதம் வழங்க இயலாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வீரர்கள் அந்தந்த வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்க இயலாது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே ஆப்சன் மட்டுமே உள்ளது.



    ஒவ்வொரு முறையும் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது என விவாதித்தோம். எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், பயந்தால் நாம் செய்ய வேண்டிய வேலை சரியாக நடக்காது. ஆடுகளத்தில் சரண்டர் ஆகி விடக்கூடாது என்பது வீரர்களிடையே வலியுறுத்தப்பட்டது.

    முதலில் வீரர்கள் 40 முதல் 50 ரன்கள் அடிப்பது முக்கியமானது. தனிப்பட்ட வீரர்களின் எதிர்பார்ப்பில் இருந்து நாம் மீள வேண்டும். அதன்பின் டிரென்ட் பிரிட்ஜ் சூழ்நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி விளையாடலாம்’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கடும் தலைவலி ஏற்படும் என பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி உள்பட முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    அதன்பின் பிரிஸ்டோல் அடிதடி வழக்க தொடர்பாக கோர்ட்டில் ஆஜரானதால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்தார். இவர் சதம் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் விராட் கோலியை வீழ்த்தி இந்தியா 107 ரன்னில் சுருள முக்கிய காரணமாக இருந்தார்.



    பிரிஸ்டோல் அடிதடி தகராறில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுவித்துள்ளது. இதனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. பட்லர், 6. பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 7. கிறிஸ் வோக்ஸ், 8. சாம் குர்ரான், 9. அடில் ரஷித், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    தற்போது பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால் கிறிஸ் வோக்ஸ்தான் வழக்கப்படி நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் சாம் குர்ரான் நீக்கப்பட வேண்டும். இவர் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லார்ட்ஸ் டெஸ்டிவ் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதனால் இங்கிலாந்து இருவரில் ஒருவரை நீக்க யோசிக்கும்.



    அப்படி என்றால் ஜோஸ் பட்லர், போப், அடில் ரஷித் ஆகியோர்தான் லிஸ்டில் உள்ளனர். அடில் ரஷித் சுழற்பந்து வீச்சாளர். சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என்றால்தான் அடில் ரஷித் நீக்கப்படுவார். இல்லை எனில் பட்லர், போப் ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்தான் நீக்கப்பட வேண்டும்.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரும் தலைவலி காத்திருக்கிறது. ஜோஸ் பட்லரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல. திறமையான வீரர்கள் உள்ளனர் என்று சங்ககரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. விராட் கோலி 200 ரன்கள் அடித்ததால் எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    ஆனால் லார்ட்ஸில் 23, 17 என நாற்பது ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரகானே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் திணறி வருகிறார்கள்.

    இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோலியை நம்பியே இருக்கிறது. அவர் ஒன் மேன் ஆர்மியாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பேட்டிங்கில் ஜாம்பவான விளங்கியவரும் ஆன சங்ககரா, இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக விராட் கோலியை பேட்டிங் செய்து வருவதை பார்க்கையில் அவருடன் மற்ற பேட்ஸ்மேன்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த பெர்மார்மர். ஆனால், மற்ற வீரர்கள் சிறந்தவர்களே.

    புஜாரா, ரகானே உண்மையிலேயே சிறந்த பேட்ஸ்மேன்க்ள. புஜாரா டெஸ்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ரகானே வெளிநாட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பார்மில் இருக்கும்போது கேஎல் ராகுல் அபாயகரமானவர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் குறைந்தவர்கள் அல்ல’’ என்றார்.
    நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 9 போட்டிகளில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி இந்தியாவை படுதோல்வியடையச் செய்தார்.

    அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 553 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இன்னும் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    3-வது டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு இதுவரை ஆண்டர்சன் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி என்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆண்டர்சன் 2003-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டும், 2008-ல் நியூசிலாந்திற்கு எதிராக 7 விக்கெட்டும், 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10 விக்கெட்டும், 2017-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 வி்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    2016-ல் இந்தியாவிடம் 0-4 எனத் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதன்பின் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றியடைந்து 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.

    தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.



    3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை நடக்கியது. பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவை 2016 தோல்விக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் லார்ட்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட்டமின்றி தோல்வியடைந்தனர். இது பெரியவர்களுக்கும், சிறவர்களுக்கும் இடையிலான போட்டி போன்று இருந்தது என்றும் சாடியுள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் இரண்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    முதல் டெஸ்டில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்திருந்தார். பிரிஸ்டோலில் நடைபெற்ற தகராறு காரணமாக கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்ததால் லார்ட்ஸ் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதனால் 3-வது டெஸ்டில் இருவரில் யார் இடம்பெறுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதுமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    ×