என் மலர்

  செய்திகள்

  சிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்
  X

  சிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகியுள்ள ரிஷப் பந்த் சிக்சருடன் டெஸ்ட் ஸ்கோரை தொடங்கி சாதனைப் படைத்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 20 வயதே ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அறிமுகமானார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 97 ரன்னில் ஆட்டமிழந்ததும், ரிஷப் பந்த் களம் இறங்கினார்.

  அப்போது அடில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்தை தடுத்தாடிய ரிஷப் பந்த், அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் சிக்ஸ் மூலம் ரன் கணக்கை தொடங்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் 11 பேர் இந்த சாதனையைப் பெற்றுள்ளனர்.  நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 32 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
  Next Story
  ×