search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்"

    இங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.

    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

    இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.

    இருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.
    ஓய்வு பெறப்போகும் அலஸ்டைர் குக்கை கவுரவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் மைதானத்திற்குள் வந்த அவரை கைதட்டி வரவேற்றனர். #ENGvIND #ThankYouChef
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஓய்வு பெறுகிறார்.

    இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பீல்டிங் செய்ய, அலஸ்டைர் குக் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது இந்திய வீரர்கள் அவரை கவுரவிக்கும் வகையில் கைதட்டி வரவேற்றனர்.
    நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என ரகானே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்டில் இந்தியா மூன்றில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

    இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டியது. துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தது. கடைசி டெஸ்ட் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.



    இந்த டெஸ்ட் குறித்து இந்திய துணைக் கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘நான்கள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத்தான் விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்’’ என்றார்.
    இங்கிலாந்திற்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் நாளை களம் இறங்குகிறது. #ENGvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 போட்டிகள் டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    முதல் 2 டெஸ்டில் மோசமாக இருந்த நமது வீரர்களின் பேட்டிங் கடந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே பேட்டிங் திறமையை 4-வது டெஸ்டிலும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிக்கும்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கேப்டன் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது. பயிற்சியின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயத்தை பொறுத்து இருக்கிறது.



    விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 2 அரை சதத்துடன் இந்த டெஸ்ட் தொடரில் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. வெற்றி பெற முடியாவிட்டால் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இந்த அணி வெற்றி அல்லது டிரா என்ற நோக்கத்தில் களம் இறங்கும்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    தற்போது முடிந்துள்ள 3 டெஸ்டில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளைமறுநாள் (30-ந்தேதி) சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இரண்டு அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து விளையாட வேண்டும். தலைசிறந்த இவர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும்.

    அஸ்வின் உடற்தகுதி பெறாவிடில், ஒரு சுழற்பந்து வீச்சுடன் விளையாடினால் அது இந்தியாவிற்கு சிக்கலானதாக இருக்கும். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அஸ்வின் உடற்தகுதி பெற வாழ்த்துகிறேன். இரண்டு பேருடன் களம் இறங்க வேண்டும். இரண்டு பேரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அது இந்தியாவிற்கு அதிக வலுவூட்டும்’’ என்றார்.
    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு திரும்ப நினைக்கையில், இந்தியா பசித்த புலிபோல் விளையாடும் என சேவாக் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 30-ந்தேதி தொடங்கும் (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டன் டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்ற நினைக்கும். அதேவேளையில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்பும்.

    நான்காவது டெஸ்டில் இந்தியா பசித்த புலியை போன்று விளையாடும் என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை வைத்து பார்க்கும்போது 4-வது டெஸ்டில் இந்தியா நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி உத்வேகத்தில் உள்ளனர். ஆனால், இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். ஆனால், இந்தியா பசித்த புலிகள் மாதிரி. அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள்.



    தற்போதுள்ள வேகப்பந்து யுனிட் மிகவும் சிறப்பானது. இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி டெஸ்ட் பிளாட் டிரக். அதில் கூட 20 விக்கெட் வீழ்த்த முடியும்.

    ஆஸ்திரேலியா ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சிறந்ததாக இருக்கும். அங்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், வீரர்கள் பெயர்கள் வரலாற்றில் எழுதப்படும். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    அறிமுக டெஸ்டின் 2-வது பந்திலேயே சிக்ஸ் அடித்தது எப்படி என்பதற்கு இளம் விக்கெட் கீப்பரான ரஷிப் பந்த் விளக்கம் அளித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்டிலும் தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடாததால் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார்.

    20 வயதாகும் ரிஷப் பந்திற்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும். இவர் களம் இறங்கும்போது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்தை தடுத்தாடிய ரிஷப் பந்த் 2-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிக்சரோடு ரன் கணக்கை துவக்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இன்னிங்சில் 24 ரன்களும், 2--வது இன்னிங்சில் 1 ரன்களும் அடித்தாலும், 7 கேட்ச் பிடித்து அசத்தினார்.



    இந்நிலையில் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கியது எப்படி என்பது குறித்து ரிஷப் பந்த் விளக்கியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘நான் கொஞ்சம் பற்றமாகத்தான் இருந்தேன். முதல் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. நான் எதையும் செய்வதற்கு யோசித்து கொண்டிருக்க மாட்டேன். நான் பந்தை பார்த்தேன். அதற்கு ஏற்றபடி செயல்பட்டேன். அவ்வளவுதான்.

    இங்கிலாந்தில் எப்போதுமே கீப்பிங் செய்வதற்கு மிகக்கடினம். ஏனென்றால் பந்து ஸ்விங் ஆவதால் பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் அங்குமிங்கும் தள்ளாடியபடியே வரும். கடந்த இரண்டரை மாதங்களாக இங்கிலாந்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடியதால், அது எனக்கு உதவியாக இருந்தது.



    பும்ரா பந்து வீசும்போது, மாறுபட்ட கை ஆக்சனோடு பந்து வீசுவார். ஆகவே, சில நேரங்களில் அவரது பந்து வீச்சிற்கு ஏற்ப இடது சைடு மூவ் ஆக வேண்டும். ஜோஸ் பட்லருக்கு எட்ஜ் ஆகும் போது நான் அதிக அளவில் லெக் சைடு மூவ் செய்து விட்டேன்.

     அது ஒன்றும் கடினமாக கேட்ச் அல்ல. அதை நான் பிடித்திருக்கனும். ஆனால், கேட்ச் மிஸ் ஆவது கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். ஒரு விக்கெட் கீப்பராக அவுட் சைடு எட்ஜ் பந்திற்காக காத்திருக்க வேண்டும். அதில் இருந்து நான் கற்றது இதுதான்’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஆனால், டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஜேமி போர்ட்டர் நீக்கப்பட்டு பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    4-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. மொயீன் அலி, 3. ஜேம்ஸ் ஆண்டர்சன், 4. பேர்ஸ்டோவ், 5. ஸ்டூவர்ட் பிராட், 6. ஜோஸ் பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. சாம் குர்ரான், 9. ஜென்னிங்ஸ், 10. போப், 11. அடில் ரஷித், 12. பென் ஸ்டோக்ஸ், 13. ஜேம்ஸ் வின்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ்.



    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் காயம் அடைந்தார். ஒருவேளை உடற்தகுதி பெற்றால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார்.
    டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகள வரலாற்றில் முதன்முறையாக இரண்டு அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் டபுள் டிஜிட் ரன்னை கடந்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் 3-வது டெஸ்ட் கடந்த 18-ந்தேதி முதல் இன்று வரை டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பொதுவாக டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்யும். முதல் நாள் முதல் செசனில் பேட்டிங் செய்வது மிகமிக கடினம்.



    ஆனால் இந்த டெஸ்டில் நடந்தது எல்லாம் தலைகீழ் இந்திய தொடக்க ஜோடி முதல் இன்னி்ங்சில் 60 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த புஜாரா இரட்டை இழக்கில் ஆட்டமிழந்தார். ரகானே, விராட் கோலி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்சில் இரட்டை இழக்க ரன்னைத் தொட்டனர்.

    இரண்டு இன்னிங்சிலும் இரு அணிகளிலும் முதல் ஐந்து வீரர்கள் இரட்டை இழக்க ரன்னை தாண்டினார்கள். டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் இரண்டு அணிகளின் முதல் ஐந்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை தாண்டியுள்ளனர்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்னில் வீழ்த்தி பெற்ற வெற்றியை இந்திய அணி கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிர்ட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தயா 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.



    டிரென்ட் பிரிட்ஜியில் பெற்ற வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள், இந்த வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்திய அணியாக எங்களால் செய்ய முடிந்த சிறிய விஷயம். கேரளாவில் தற்போது கடினமான நேரம்’’ என்றார்.
    ஜோ ரூட்டை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதை இங்கிலாந்து கால்பந்து ரசிகர் டேல் அலி ஸ்டைலில் லோகேஷ் ராகுல் கொண்டாடினார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 25-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ஜோ ரூட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டி விளிம்பில் பட்டு மின்னல் வேகத்தில் 2-வது ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுல் கைக்கு சென்றது.



    கேஎல் ராகுல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த சந்தோசத்தை வலது கையை வைத்து சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார். இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலி கோல் அடித்ததும் சல்யூட் அடித்து வெற்றியை கொண்டாடுவார்.



    அவர் மாதிரி வலது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல்களை மடக்கி சல்யூட் அடிப்பது கடினம். இது மிகப்பெரிய அளவில் டேல் அலி செலபிரேட் சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலம் ஆனது. இதை இன்று கேஎல் ராகுல் செய்தார். அவரது செய்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலஸ்டைர் குக் இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND #Cook
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்ட் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் அதேவேளையில் அலஸ்டைர் குக்கின் மனைவிற்கு 3-வது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தில் குக் மனைவியின் அருகில் இருக்க விருப்பம் தெரிவித்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு அனுமதி அளிக்கும்.



    இதனால் நான்காவது டெஸ்டில் அலஸ்டைர் குக் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஒரு வேளை அலஸ்டைர் குக் விளையாடாவிட்டால் தொடர்ச்சியாக 157 டெஸ்டில் விளையாடி படைத்திருக்கும் சாதனை முடிவுக்கு வரும்.
    ×