என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கில்லுக்கும், இந்திய அணிக்கும் ராசியில்லாத டாஸ்: ஜனவரியில் இருந்து தொடர்ந்து 14 தோல்வி..! தோல்வி..!
- சுப்மன் கில் தொடர்ந்து 4 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
- ஜனவரியில் இருந்து தொடர்ச்சியாக 14 போட்டிகளில் இந்தியா டாஸ் தோற்றுள்ளது.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஹெட் கேட்டார். ஆனால் டெய்ல் விழ பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்தான் சுப்மன் கில் முதன்முறையாக கேப்டன் பதவியை ஏற்கிறார். இவருக்கும் டாஸ்க்கும் ராசியில்லாமல் உள்ளது. இந்த நான்கு போட்டிகளிலும் சுப்மன் கில் டாஸ் தோற்றுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு மட்டுமல்ல. இந்திய அணிக்கும் டாஸ்க்கும் வெகுதூரமாக உள்ளது. இந்திய ஆண்கள் சர்வதேச அணி கடந்த ஜனவரில் இருந்து 14 போட்டிகளில் டாஸ் வென்றதே கிடையாது. இந்த மோசமான சாதனை அடுத்த போட்டியிலாவது முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்போம்..!
Next Story






