என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENGvsIND டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு
- ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.
சாய் சுதர்ஷன் 61 ரன்னும், ஜெய்ஸ்வால் 58 ரன்னும், கே.எல்.ராகுல் 46 ரன்னும், கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 19 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
ரிஷப்பண்ட் 37 ரன்னில் காயத்தால் வெளியேறினார். கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.
ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவகுழு அவரது முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், காயமடைந்த ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகுவார் என்று கூறப்படுகிறது.






