என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கால் விரலில் காயம்: பண்ட் விளையாடாவிட்டால் இந்திய அணிக்குதான் பாதிப்பு - சாய் சுதர்ஷன்
- ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது. கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி , ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஷர்துல் தாக்கூர், புதுமுக வீரர் அன்சுல் கம்போஜ் ஆகியோர் இடம் பெற்றனர். முதலில் விளை யாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.
சாய் சுதர்ஷன் 61 ரன்னும், ஜெய்ஸ்வால் 58 ரன்னும், கே.எல்.ராகுல் 46 ரன்னும், கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 19 ரன் களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரிஷப்பண்ட் 37 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.
கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.
ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவகுழு அவரது முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறது.
காயம் காரணமாக ரிஷப் பண்ட் இன்று விளையாடு வாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்று சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வந்த போது காயம் அடைந்தார். கடுமையான வலியால் துடித்தார். அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வராவிட்டால், அது அணிக்கு பாதிப்புதான். ஆனாலும் களத்தில் இருக்கும் மற்ற பேட்ஸ் மேன்கள் தங்களால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி, அந்த இழப்பை ஈடுகட்ட முயற்சிப்பார்கள். ரிஷப் பன்ட் தொடரில் இருந்து விலகினால் நாங்கள் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு சாய்சுதர்ஷன் கூறியுள்ளார்.






