என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENG vs IND: 4வது டெஸ்ட் - காலில் ஏற்பட்ட காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய பண்ட்!
- ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும் ஜெய்ஸ்வால் 58 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இப்போட்டியில் ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார்.
கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கிய நிலையில், வலியால் அவதிப்பட்ட பண்ட் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
முதல் நாள் முடிவில் ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறும். இன்றைய போட்டியில் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.






