search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர்"

    • ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார்.

    அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஸ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம்.
    • லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன்.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க வீரர் பென்டக்கெட் 98 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து அணி நல்ல நிலையில் இருப்பதாக பென் டக்கெட் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இது நிச்சயமாக எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அவர்கள் 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.

    • நேற்றைய ஆட்டத்தின் போது நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு என ஸ்மித் கூறினார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். லயனின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

    அவர் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் ஜொலித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்சுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பான பார்னர்ஷிப்பை அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

    இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் அவர் மீண்டும் அணியின் இணைவாரா என்பது சந்தேகம்தான்.

    இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவரது கை விரலில் ஏதும் பிரச்சினை இல்லை. அவர் வருகிற டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக டோட் மர்பி இடம் பெறுவார் என ஸ்மித் கூறினார். 

    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
    • பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார்.

    லண்டன்:

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவர் முடிந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே இருந்து சில போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். குறிப்பாக வார்னரை நோக்கி ஓடினர். அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த வர்ண பொடியை மைதானத்தில் தூவினர்.

    பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார்.

    இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் படைத்துள்ளார்.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில் 6-வது வீரராக லாதன் லயன் பந்து வீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:-

    159 - அலஸ்டர் குக்

    153 - ஆலன் பார்டர்

    107 - மார்க் வாக்

    106 - சுனில் கவாஸ்கர்

    101 - பிரண்டன் மெக்கல்லம்

    100* - நாதன் லயன்

    • இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது போட்டி நாளை தொடங்குகிறது.
    • மொயின் அலிக்கு பதிலாக ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக முதல் டெஸ்டில் காயமடைந்த மொயின் அலிக்கு பதிலாக ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவர்.

    இங்கிலாந்து பிளேயிங் லெவன்:-

    பென் டக்கட், ஜேக் க்ராவ்லி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஓலி ராபின்சன், ஜோஷ் டங், ஜேம்ஸ் ஆண்டர்சன்

    • இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது.
    • முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்து இந்த டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    லார்ட்ஸ்:

    5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே பர்மிங்காமில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பர்மிங்காமில் வெற்றி பெறும் வாய்ப்பை அந்த அணி தவறவிட்டது. கேப்டன் பென் ஸ்டோக்சின் தவறான முடிவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்து இந்த டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஜேக் கிராவ்லி, பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ராபின்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 141 ரன்னும், 2-வது இன்னிங்சில் 65 ரன்னும் குவித்தார்.

    இது தவிர ஸ்டீவன் சுமித், டிரெவிஸ் ஹெட், லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய எங்களது அதிரடியான அணுகுமுறை சரியானது என்று நிரூபித்து காட்டியிருக்கிறோம்.
    • மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பர்மிங்காம்:

    பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் 281 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுடன் 'டிக்ளேர்' செய்தது விமர்சனத்திற்குள்ளானது. தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் 30-40 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி எச்சரிக்கையுடன் மிகவும் நிதானமாக விளையாடியது. கடைசி கட்டத்தில் மட்டும் கொஞ்சம் வேகமாக மட்டையை சுழற்றி வெற்றிக்கனியையும் பறித்தது.

    இந்த நிலையில் எஞ்சிய போட்டிகளிலும் தங்களது ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும், அதை மாற்றப்போவதில்லை என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் எப்போதும் அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். எதிரணியை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக சில அதிரடியான முடிவுகளை மேற்கொள்கிறோம்.

    இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியினருக்கு அவர்களது அணுகுமுறையும், யுக்தியும் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஏனெனில் இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் எஞ்சிய போட்டிகளிலும் இதே போன்ற வியூகங்களை தொடருவார்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்த தொடர் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கப்போகிறது.

    நாங்கள் விளையாடிய விதத்தில் தவறில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய எங்களது அதிரடியான அணுகுமுறை சரியானது என்று நிரூபித்து காட்டியிருக்கிறோம். இந்த டெஸ்டில் சற்று அதிர்ஷ்டமும் இருந்திருந்தால் முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியிருக்கலாம். இரு அணிகளும் வெவ்வேறு பாணியில் விளையாடினாலும் பரபரப்பான இந்த டெஸ்டை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    களத்தில் எங்களது வீரர்கள் வெளிக்காட்டிய முயற்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதனால் லண்டன் லார்ட்ஸ் டெஸ்டுக்கு(28-ந்தேதி தொடக்கம்) நல்ல நம்பிக்கையுடன் செல்வோம். 2-வது டெஸ்டில் இன்னும் தீவிரமாகவே விளையாடுவோம்.

    விரலில் காயமடைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி உடல்தகுதியுடன் இருந்தால் லார்ட்ஸ் டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படுவார். இன்னும் நாலைந்து நாட்கள் இருப்பதால் அதற்குள் காயம் குணமடைந்து விடும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

    மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஐந்தாவது நாள் ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக தாமதமாக தொடங்கியது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன.

    7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

    இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் இறங்கிய மார்னஸ் 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும், ஸ்காட் போலாந்து 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரூன் கிரின் 28 ரன்களும் எடுத்தனர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர், அப்ரம் அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர்.

    87.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இருவரும் விளையாடினர்.

    இதில், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும எடுத்தனர்.

    இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

    இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • 4ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் சதமடித்து 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 141 ரன்னும், அலெக்ஸ் கேரி 66 ரன்னும், டிராவிஸ் ஹெட் 50 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது.

    அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், பேர்ஸ்டோ 20 ரன்கள், மொயீன் அலி 19 ரன், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள், ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 

    ×