என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி நல்ல நிலையில் உள்ளது- பென் டக்கெட்
    X

    ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி நல்ல நிலையில் உள்ளது- பென் டக்கெட்

    • ஆஸ்திரேலியா 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம்.
    • லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன்.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க வீரர் பென்டக்கெட் 98 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து அணி நல்ல நிலையில் இருப்பதாக பென் டக்கெட் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இது நிச்சயமாக எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அவர்கள் 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.

    Next Story
    ×