search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேர்ஸ்டோவ்"

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.

    லண்டன் :

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஓவர் முடிந்து விட்டது என எண்ணி கிரீசை விட்டு வெளியே வந்தார். அப்போது விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பலரும் இதை கிரிக்கெட் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த நிலையில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. என்றெல்லாம் திட்டக்கூடாது என அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டெம்பில் இருந்து அதிக தூரம் நின்று கொண்டு பந்தை எரிந்து சும்மா ஆட்டம் இழக்க செய்திருக்க மாட்டார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பந்து முடிவதற்குள் கிரீசை விட்டு வெளியே செல்வதை கவனித்து இருந்தால் மட்டுமே இப்படி ஆட்டம் இழக்க வைத்திருக்கக்கூடும். இந்த தருணத்தில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. இது நல்ல கிரிக்கெட் கிடையாது என்றெல்லாம் திட்டக்கூடாது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    அஸ்வினின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர்.
    • தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். ஓவர் முடிந்த நிலையில் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார்.

    டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர்.

    மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    அவர் அவுட் ஆகும் போது ரன் அவுட் என கூறிய நிலையில் போட்டி முடிந்த பிறகு அது ஸ்டெம்பிங் என மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவுட்தான் என்றும் நாட் அவுட் என்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
    • பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார்.

    லண்டன்:

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவர் முடிந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே இருந்து சில போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். குறிப்பாக வார்னரை நோக்கி ஓடினர். அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த வர்ண பொடியை மைதானத்தில் தூவினர்.

    பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார்.

    இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் சதமடித்தார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சதமடித்தார்.

    லீட்ஸ்:

    நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். பிளெண்டல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் சவுத்தி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் அவுட்டாகினர்.

    ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், ஓவர்டோன் ஜோடி பொறுப்புடன் ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. பேர்ஸ்டோவ் சதமடித்தார். ஓவர்டோன் அரை சதமடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 130 ரன்னுடனும், ஓவர்டோன் 89 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், வாகர் 2 விக்கெட்டும், சவுத்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×