search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    • டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ''1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, "டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24-ந்தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்" என்றும் தெரிவித்தார். பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.

    அவர் கூறும்போது, "கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்" என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது என மிரட்டி வருகிறது.
    • சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும்.

    பீஜிங் :

    அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

    தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.

    அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது.

    இதனால் சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என சீன எச்சரித்தது.

    இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    அதோடு வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்து பேசுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் முக்கியத்துவம் பெற்றதாகவும், தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜோ பைடனை ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தைவான் விவகாரம் குறித்து ஜோ பைடனிடம் ஜின்பிங் கூறியதாவது:-

    சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு குறுக்கீட்டையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ஜின்பிங் கூறினார்.

    • பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை.
    • தைவான் தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் இல்லை என பைடன் உறுதி

    வாஷிங்டன்:

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.

    இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க அதிபர் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்.

    தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் தெரிவித்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • ஒமைக்ரான் துணை வகை தொற்றால் அமெரிக்க அதிபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம் சீராக உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓ கானர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகை கொரோனா வைரசால் தற்போது அமெரிக்காவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அதிபர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜோ பைடனுக்கு, இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி இருந்தாலும் அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை சீராக உள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பைடன் போட்டிருந்த நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா தடுப்பூசிகளை பைடன் முழுமையாக போட்டு கொண்டுள்ளார்.
    • தாம் சிறப்பாகச் செயல்படுகிறேன் என்று பைடன் டுவிட்டர் பதிவு.

    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பரிசோதனையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.

    பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தனது புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்த பைடன்  நண்பர்களே, நான் சிறப்பாகச் செயல்படுகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

    • அதிபர் ஜோ பைடனின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை.
    • சூழ்நிலை சரியானப் பிறகு பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோ பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார்.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ (120 மைல்) தொலைவில் உள்ள டெலாவேரின் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டின் மீது தடைசெய்யப்பட்ட வான்வெளியில் ஒரு சிறிய தனியார் விமானம் ஒன்று பறந்தது. இதனால், அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியை பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இருப்பினும், தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. அதிபர் ஜோ பைடனின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. சூழ்நிலை சரியானப் பிறகு பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.

    மேலும், அதிபரை பாதுகாக்கும் ரசசிய சேவை, தவறுதலாக விமானத்தை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அமெரிக்க ரகசிய சேவை விமானியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். #Trump #NorthKorea
    வாஷிங்டன் :

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    வியட்நாமில் நடைபெற உள்ள கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். வியட்நாம் சந்திப்பு குறித்து தீர்க்கமாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் பல வி‌ஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன். அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு காலக்கெடு நிர்ணயித்து வடகொரியாவுக்கு நாங்கள் நெருக்கடி தரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அது நிச்சயம் நடக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Trump #NorthKorea
    சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். #Pakistandoesntdo #US #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார்.

    பாகிஸ்தானில் நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம் ஏதுமிருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தின் அருகே (ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாத் பகுதி) பாதுகாப்பாக வாழ்வது அதைவிட நல்ல விஷயம். அவர் அங்கேதான் வாழ்ந்து வருகிறார் என்பது பாகிஸ்தானில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருந்தது.



    ஆனால், இது தெரியாமல் நாம் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு 130 கோடி டாலர்களை கொடுத்து வந்தோம். அவர்கள் நமக்காக ஒன்றுமே செய்ததில்லை என்பதால்தான், இனி இந்த நிதியை வழங்க கூடாது என நான் உத்தரவிட்டேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். #Pakistandoesntdo #US #Trump

    ×