search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Osama bin Laden"

    • சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
    • பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.

    லண்டன்:

    அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

    இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:

    சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.

    அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

    பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #BinLaden #Pakistan
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பதிலடி தந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் இயக்க நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கையை நினைவு கூர்ந்தார்.

    அப்போது அவர், “பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும். இதுவரை நினைத்து பார்த்திராத வகையில், இந்தியா எதையும் செய்ய முடியும் என்பதை விமானப்படை தாக்குதல் நிரூபித்துக்காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதே கருத்தை ராம் மாதவ் போன்ற பாரதீய ஜனதா தலைவர்களும் ஆமோதித்தனர்.
    சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். #Pakistandoesntdo #US #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார்.

    பாகிஸ்தானில் நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம் ஏதுமிருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தின் அருகே (ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாத் பகுதி) பாதுகாப்பாக வாழ்வது அதைவிட நல்ல விஷயம். அவர் அங்கேதான் வாழ்ந்து வருகிறார் என்பது பாகிஸ்தானில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருந்தது.



    ஆனால், இது தெரியாமல் நாம் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு 130 கோடி டாலர்களை கொடுத்து வந்தோம். அவர்கள் நமக்காக ஒன்றுமே செய்ததில்லை என்பதால்தான், இனி இந்த நிதியை வழங்க கூடாது என நான் உத்தரவிட்டேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். #Pakistandoesntdo #US #Trump

    அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஜா பின் லேடன், அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரது மகளை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #OsamaBinLaden #HamzaBinLaden
    லண்டன்:

    உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா.. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். #OsamaBinLaden #HamzaBinLaden
    ×