என் மலர்

  நீங்கள் தேடியது "Prince Charles"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளவரசர் 3-ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  லண்டன்:

  இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
  • பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.

  லண்டன்:

  அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

  இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

  இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:

  சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.

  ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.

  அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார். #PrinceCharles #MeghanMarkle
  லண்டன்:

  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

  இந்தநிலையில் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளுக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.

  டங்ஸ்டன் போல் மேகன் உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ள வீரராக இருப்பதால் அவருக்கு இளவரசர் சார்லஸ் அந்த பெயரை சூட்டியதாக தெரிகிறது. கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹாரிக்கு மேகன் ஒரு பலமாக இருப்பார் என்பதால் அப்பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


  திருமணத்தின் போது மேகனின் தந்தை உடல்நலமின்றி இருந்தார். எனவே தந்தையின் நிலையில் இருந்து மேகனின் கரம்பற்றி அழைத்து வந்தார். அப்போதே அவர் பலராலும் பாராட்டப்பட்டார். ஏற்கனவே ராணி எலிசபெத்தின் மனதில் இடம் பிடித்துவிட்ட மேகன் தற்போது மாமனாருக்கும் பிரியமான மருமகளாகிவிட்டார். இந்தநிலையில் அவர் தனது மருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

  ராணி எலிசபெத்துக்கு சாஸேஜ் என்பது முதல் கேரி வரை பல செல்லப்பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #PrinceCharles #MeghanMarkle
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணத்தில் மேகன் மார்க்லேவின் தந்தைக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைப்பார் என கூறப்பட்டுள்ளது. #PrinceHarry #MeghanMarkle
  லண்டன்:

  பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

  இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. திருமணம் முடிவு செய்ததில் இருந்து மார்க்லே குடும்பத்திலிருந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. மார்க்லேவின் சகோதரர் இந்த திருமணத்தை நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதினார். குடும்பத்தைச் சேர்ந்த பலரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கிடையில், மேகனின் தந்தை தாமஸ் மார்க்லே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாது என தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில், ஹாரி-மார்க்லே திருமணத்தில் தனது தந்தைக்கு பதிலாக ஹாரியின் தந்தையும், வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு இளவரசர் சார்லஸ் திருமணத்தில் மேகன் மார்க்லேவின் தந்தைக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைப்பார் என கெங்கிஸ்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #PrinceHarry #MeghanMarkle
  ×