என் மலர்

    செய்திகள்

    மருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்
    X

    மருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார். #PrinceCharles #MeghanMarkle
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளுக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.

    டங்ஸ்டன் போல் மேகன் உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ள வீரராக இருப்பதால் அவருக்கு இளவரசர் சார்லஸ் அந்த பெயரை சூட்டியதாக தெரிகிறது. கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹாரிக்கு மேகன் ஒரு பலமாக இருப்பார் என்பதால் அப்பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


    திருமணத்தின் போது மேகனின் தந்தை உடல்நலமின்றி இருந்தார். எனவே தந்தையின் நிலையில் இருந்து மேகனின் கரம்பற்றி அழைத்து வந்தார். அப்போதே அவர் பலராலும் பாராட்டப்பட்டார். ஏற்கனவே ராணி எலிசபெத்தின் மனதில் இடம் பிடித்துவிட்ட மேகன் தற்போது மாமனாருக்கும் பிரியமான மருமகளாகிவிட்டார். இந்தநிலையில் அவர் தனது மருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    ராணி எலிசபெத்துக்கு சாஸேஜ் என்பது முதல் கேரி வரை பல செல்லப்பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #PrinceCharles #MeghanMarkle
    Next Story
    ×