search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kate Middleton"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது வெளியில் வராமல் இருந்தது வதந்திகளுக்கு வழி வகுத்தது.
    • முதல் முறையாக கேட் மிடில்டன் பொது வெளியில் வந்துள்ளார்.

    வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். எனினும், சிகிச்சைக்கு பிறகு கேட் மிடில்டன் பொது வெளியில் வராமல் இருந்தது பல்வேறு வதந்திகளுக்கு வழி வகுத்தது.

    இந்த நிலையில், இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன் பண்ணை கடை ஒன்றிற்கு சென்றிருக்கிறார். கடைக்கு சென்று திரும்பிய கேட் மிடில்டன் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு முதல் முறையாக கேட் மிடில்டன் பொது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    விண்ட்சர் அருகில் உள்ள அடிலைடு காட்டேஜ் அருகில் உள்ள பண்ணை கடைக்கு கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் ஜோடி வந்துள்ளனர். முன்னதாக அவர்களது குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
    • சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது.

    இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனால் கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

    ஆனால் அந்த படம் டிஜிட்டல் முறையில் 'எடிட்' செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது. பலர் கேத் மிடில்டனுக்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 17 அன்று கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது
    • தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகவும் வதந்திகள் உலவுகின்றன

    பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

    சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் "கேட்" (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

    ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


    கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

    கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

    உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

    பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    • கேட் மிடில்டன்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • மார்ச் இறுதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார். தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என சமீபத்தில் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • மார்ச் மாதம் வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்.

    வேல்ஸ் இளவரசி இரண்டு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கெனிங்ஸ்டன் அரண்மனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார். தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

    ×