இங்கிலாந்து இளவரசி "கேத் மிடில்டன் எங்கே?" ஹேஷ்டேக் வைரலானது

கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது.
இங்கிலாந்து இளவரசி "கேத் மிடில்டன் எங்கே?" ஹேஷ்டேக் வைரலானது
Published on

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனால் கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த படம் டிஜிட்டல் முறையில் 'எடிட்' செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது. பலர் கேத் மிடில்டனுக்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com