search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி"

    • 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
    • எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பனிடுதல் பணிகள் இருந்தாதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    • அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசத்தி பெற்றது. இந்த மலைக்கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் முதல் மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பணிடப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வந்ததால் மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பக்தர்கள் அனைவரும் படியிலேயே ஏறிச்சென்றனர். வயதானவர்கள் பலரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரோடு போடும் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வந்ததால் மலைப்பாதை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

    இதனால் அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    • ஆடிப்பெருக்கையொட்டி நாளை பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்
    • நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை யொட்டி 15 ஏக்கர் பரப்பள வில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொது மக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்து ஆயிரக்க ணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாது காப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானி சாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதுகுறித்து நீர்வள த்துறை அதிகாரிகள் கூறி யதாவது:- பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.

    மேலும் அணை மேற்பகுதி யில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப் பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர். இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகு தியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகு தியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானி சாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதி க்கப்படும் என்று எதிர்பா ர்த்து காத்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்ற த்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
    • நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.

    தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது.
    • சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

    திருப்பூர்:

    மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) 5 ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் இருவரும், 3 பேர் பணியாற்ற கூடிய இடங்களில் ஒருவரும் பணிபுரிகின்றனர்.பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது. இதனால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நிலுவையில் உள்ள ஓட்டுனர் உரிம விண்ணப்பங்களுக்காக டெஸ்டிங் பணி மட்டும் சனிக்கிழமைகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பணி நாளாக மாற்றினால், முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய ஆதிதிராவிட மக்கள்
    • கோர்ட் உத்தரவினால் அனுமதி

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மங்களநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் உட்பட 6 சமூகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம் கிராம தெய்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து சமூகத்தினரும் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டு வந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் மட்டும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கதையாகி வந்த நிலையில் தற்போதைய இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை, வரி வசூல் செய்வதில்லையெனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணையில் கோவிலுக்குள் எந்த ஒரு திருவிழா நடத்தினாலும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களையும் சேர்த்து, அவர்களிடமும் வரி வசூல் செய்து விழா நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நேற்று ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தீண்டாமை பிரச்சனை நேற்று தீர்வுக்கு வந்தது.

    • திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே ஆற்றூர், சிதறால் திக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாறையை உடைத்து துண்டுகளாக மாற்றி வேலிக்கல் மற்றும் பாலக்கல் போன்ற தேவைகளுக்கு அனுமதி பெற்று எடுத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சிதறால் பகுதியிலிருந்து டெம்போவில் வேலிக்கல் கடத்துவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆற்றூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் வேலிக்கல் ஏற்றி தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம் போவை கல்லுடன் பறிமுதல் செய்தனர். பின்னர்அதனை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
    • ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரே நேர்கோட்டில் இருந்து வருவதால் ஒரே நாளில் 3 லட்சுமி நரசிம்மரை நேரில் சென்று தரிசனம் செய்தால் மக்களுக்கு துன்பம் நீங்கி கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கு கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள கோவில் என்பதால் உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து வந்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அனுமதி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கூறியிரு ப்பதாவது: - சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 18- ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி திருமணம் நடத்துவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு, முதன்முறையாக திரும ணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும். பின்னர் மக்களின் வரவேற்பு மற்றும் முன்பதிவு அதிக அளவில் நடைபெறுவதை ெபாறுத்து கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப திருமணங்கள் நடத்துவதற்கு அரசின் உரிய வழிகாட்டுதலின்படி என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்து திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்பதனை அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி யதோடு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.

    • நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரிலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சரணாலய பகுதிக்குள் வந்துசெல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது பணியாளர், சரணாலய எல்லையில் வன அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். சட்டவிதிகளின்படி எல்லை குறிகளை அழிக்கவோ மாற்றவோ கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது.

    சரணாலயத்தில் இருந்து அகற்றப்படும் பொருட்களை, சுற்றுப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. சரணாலயத்துக்கு தீ வைக்க கூடாது. எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எவ்வித ஆயுதத்துடனும் பிரவேசிக்க கூடாது.

    தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து, ஆபத்தான ரசாயனங்களை உள்ளே எடுத்துவரக்கூடாது. தேசிய வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், சரணாலயத்துக்குள் வணிக சுற்றுலா, ஓட்டல், லாட்ஜ் கட்ட முடியாது.தலைமை வன உயிரின காப்பாளர், வன உயிரினங்கள் நலனுக்கு ஏற்ப சரணாலயத்தை ஒழுங்குபடுத்தலாம். கட்டுப்படுத்தலாம்,தேவையெனில் தடை செய்யலாம்.

    சரணாலயம் அறிவிக்கப்பட்ட 3 மாதத்துக்குள், 10 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் நபர்கள் ஆயுத உரிமம் வைத்திருந்தாலும், ஆயுதங்கள் வைத்திருந்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    தலைமை வன உயிரின காப்பாளர் முன் அனுமதியின்றி, சரணாலயத்தை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் வசிப்பவருக்கு புதிய உரிமம் எதுவும் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களை வெளியேற்றலாம்.

    அத்துமீறி எடுத்துவரும் பொருட்கள், கருவிகளை பறிமுதல் செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுகுறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அனுமதி
    • பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில், இவ்வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் சேதமடைந்த பழைய வீடுகளை சீரமைப்பதற்கு விதிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

    கடந்த 11-4-2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது இது குறித்து நான் பேசினேன். அப்போது நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் 2019-ம்  ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் கம்பைன்டு டெவலப்மெண்ட் அன்ட் பில்டிங் ரூல்ஸ் 2019 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த சட்ட அடிப்படையிலேயே ஒரு சென்ட்டுக்கு குறைவான நிலங்களும், அதே போல் 3 அடிக்கு குறைவான தெருக்களும் இருக்கின்றன. அவர்கள் கட்டிட அனுமதிக்கு சென்றால் இதுவரையில் கிடைக்கவில்லை. கிட்டத் தட்ட 3 ஆயிரம் விண்ணப்பங்கள் அரசிடம் பெண்டிங்கில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் வீடு கட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அவர்களால் வீடு கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட வாங்க முடியவில்லை என பேசினேன்.

    அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பதிலளித்து பேசும் போது, கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசால் அலுவலர்கள் அடங்கிய கமிட்டி போடப்பட்டு அவர்களும் நாகர்கோவில் வந்து, குறுகிய தெருக்களையும், ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அமைந்துள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடனடியாக துறை அமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் குறுகிய இடங்களில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பித்துள்ள மக்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக கட்டிட அனுமதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வழங்கும் விதிகளில் மக்கள் நலன்கருதி சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்நிலை மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    • ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங் களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

    இத்திட்டம் மூலம் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 511 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங் கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதா கும்.

    இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட (https://tnesevai.tn.gov.in/) (அல்லது) (https://.tnega.tn.gov.in/) என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும், விண்ணப்பதாரர்கள் ஜூன் 1 முதல் 30-ந்தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பகட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.விண்ணப்பதாரர் களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக் கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங் கப்படும்.

    மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பேரூராட்சி தலைவர் தலைமையில் மக்கள் திரண்டதால் பரபரப்பு
    • அனுமதியின்றி மதுபான கடைக்கு கட்டிடம் கட்டக்கூ டாது என வலியுறுத்தினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கல்லுக் கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் சந்திப்பில் ஒரு தனியார் நிலத்தில் ரெஸ்டாரண்டுக்காக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிட அமைப்பு, மனமகிழ்மன்றம் (மதுபானம் கடை) போன்று இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    லட்சுமிபுரம் சந்திப்பில் தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் வருவார்கள் என்பதால் குறிப்பிட்ட கட்டிடப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், பேரூராட்சி தலைவர் மனோகரசிங் தலைமையில் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி மதுபான கடைக்கு கட்டிடம் கட்டக்கூ டாது என வலியுறுத்தினர். இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதில், பேரூராட்சி அனுமதி பெறாமல் கட்டிடப்பணி நடந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைவர் பணிகளை நிறுத்த கூறினார். இதனால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலையை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் லட்சுமிபுரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×