search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்குள் சென்ற ஆதிதிராவிட மக்கள்
    X

    கோவிலுக்குள் சென்ற ஆதிதிராவிட மக்கள்

    • 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய ஆதிதிராவிட மக்கள்
    • கோர்ட் உத்தரவினால் அனுமதி

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மங்களநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் உட்பட 6 சமூகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம் கிராம தெய்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து சமூகத்தினரும் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டு வந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் மட்டும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கதையாகி வந்த நிலையில் தற்போதைய இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை, வரி வசூல் செய்வதில்லையெனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணையில் கோவிலுக்குள் எந்த ஒரு திருவிழா நடத்தினாலும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களையும் சேர்த்து, அவர்களிடமும் வரி வசூல் செய்து விழா நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நேற்று ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தீண்டாமை பிரச்சனை நேற்று தீர்வுக்கு வந்தது.

    Next Story
    ×