search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போ பறிமுதல்"

    • காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதனையடுத்து போலீசார் டெ ம்போ வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே ஆற்றூர், சிதறால் திக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாறையை உடைத்து துண்டுகளாக மாற்றி வேலிக்கல் மற்றும் பாலக்கல் போன்ற தேவைகளுக்கு அனுமதி பெற்று எடுத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சிதறால் பகுதியிலிருந்து டெம்போவில் வேலிக்கல் கடத்துவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆற்றூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் வேலிக்கல் ஏற்றி தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம் போவை கல்லுடன் பறிமுதல் செய்தனர். பின்னர்அதனை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் முப்பந்தல் அருகே ெரயில்வே ரோடு பகுதியில் ரோந்து பணி சென்றனர்.

    அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தோடு செம்மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் செம்மண் ஏற்றிய டெம்போ மற்றும் ஏற்ற வந்த டெம்போ என 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

    • சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
    • சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே திற்குறிச்சி தச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30) இவருக்குச் சொந்தமான டெம்போவில் அனுமதி இன்றி செம்மண் கடத்துவதாக பாகோடு கிராம அலுவலர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதை அடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி பாறை கற்களை உடைத்து வாகனங்களில் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு டெம்போ வந்துக்கொண்டிருந்தது. அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது. டெம்போவில் எந்த அனுமதியும் இல்லாமல் பறாங்கல் கடத்துவது தெரிய வந்தது.

    இதைத்தொடர்து டெம்போவையும் பறிமுதல் செய்த போலீசார் டெம்போ டிரைவரான குளப்புறம் பகுதியை சேர்ந்த ஜோண்ஸ் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தினர்.
    • போலீசார் டெம்போ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    புவியியல் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீகுமார், குளச்சல் கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் கனிம பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தினர். அப்போது டிரைவர் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதி காரிகள் டெம்போவை சோதனை செய்தபோது அனுமதியின்றி ஒரு டன் எம்சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் எம்சாண்ட் மணலுடன் டெம்போவை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து டெம்போவை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் கொண்டு செல்ல ப்பட்டது. போலீசார் டெம்போ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    ×