என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழித்துறை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
- சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
- சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே திற்குறிச்சி தச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30) இவருக்குச் சொந்தமான டெம்போவில் அனுமதி இன்றி செம்மண் கடத்துவதாக பாகோடு கிராம அலுவலர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதை அடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






