search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் ஆய்வு"

    • 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    பொது வினியோக திட்ட துணை பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளர், கிருஷ்ணகி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பனை சங்க மேலாண்மை இயக்குனர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தமிழரசு மற்றும் 17 கூட்டுறவு சார் பதிவாளர்கள், 5 முதுநிலை ஆய்வாளர்களை கொண்ட பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த குழு கிருஷ்ணகிரி, பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தவறு இழைத்த ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

    • நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.
    • அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினி உத்திரவின்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் அதியமான் கோட்டை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கில் 7000 டன் நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.

    அப்போது ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விழிப்புபணி (விஜிலென்ஸ்) அலுவலர் லோகநாதன் தலைமையிலான துணை மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் அட்டிகளை கணக்கெடுத்ததில் அட்டி கணக்கு சரியாக உள்ளதாகவும், அட்டிகளில் உள்ள மூட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு சில அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.

    அதனால் கடந்த பிப்ரவரி முதல் டெல்டா மாவட்டங்களில் இருந்து வாங்கப்பட்ட நெல்லின் அளவிலிருந்து அரவைமில் முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெல் போக மீதமுள்ள நெல்லை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் அரவை மில் முகவர்களுக்கு அரவைக்காக ஏற்றி அனுப்பிய பிறகு தான் மூட்டைகள் குறைகிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.
    • குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்கள் மறு ஆய்வு செய்த பிறகு தான் இயக்கப்பட வேண்டும்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட போக்கு வரத்து அலுவலர்கள், தனியார் பள்ளி பஸ்களை வருடாந்திர கூட்டாய்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

    இந்த ஆய்வில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி, ஆர்.டி.ஓ. பாபு, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் திருமலைராஜன்,பிரேக் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் விளக்கி கூறினர். பிறகு 125 பஸ்களை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறு குறைகள் இருந்த, 18 பஸ்களை, தங்கள் குறைகளை சரிசெய்து கிருஷ்ணகிரி அலுவலகத்திற்க்கு சென்று மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.டீ.ஓ. காளியப்பன் கூறினார். ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஓட்டுநர்களுக்கு ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
    • குறைபாடுகளுடைய 7 வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களில் இதில் முதல் கட்டமாக 85 வாகனங்களை பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்திற்க்கு வரவழைக்கபட்டு வாகனங்களை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கு செயல்விளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது குறித்தும், ஓட்டுநர்களுக்கு ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குறைபாடுகளுடைய 7 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மீதமுள்ள வாகனங்களை 2-ம் கட்டமாக ஆய்வு செய்யப்படும் என்றும், இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடனிருந்தார்.

    • வேலைவாய்ப்பு மற்றும் குறை தீர்ப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி புரிவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • வாய்க்கால் தூர்வாரி இருபுறமும் கரையமைத்து பணி மேற்கொள்ள வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பிக்கம்பட்டி கௌரிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிக்கம்பட்டி பகுதியில் வேலை செய்வதை திடீர் அய்வு மேற்கொண்ட உதவி திட்ட அலுவலர் ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் குறை தீர்ப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி புரிவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு வேலை செய்யும் பெண்களிடம் எவ்வாறு பணிபுரிய வேண்டும். மேலும் வாய்க்கால் தூர்வாரி இருபுறமும் கரையமைத்து பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் செயலாளர் சுரேஷ் உள்ளிட்றோர் உடன் இருந்தனர்.

    • தற்போது கட்டுமானம் தயாரிக்கும் பொருட்டு நாங்கள் கோவிலில் அளவுகளை சரி பார்த்துள்ளோம்.
    • மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் கோவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில் ஒன்றாகும். இக்கோவில் கட்டி சுமார் 110 வருடங்கள் ஆகும்.

    இக்கோவில் தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறை எடுத்து சுமார் 40 வருடங்கள் ஆகும் . இந்நிலையில் இக்கோவிலில் பலமுறை பக்தர்கள் பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் இக்கோவில் வரைபடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. கட்டுமான மதிப்பீடு தயாரிக்கும் பொருட்டு உதவி பொறியாளர்கள் பாலகிருஷ்ணன் , முத்துசாமி தலைமையில் கோவில் பணியாளர்கள் பிரபு ஜெகதீசன் ஆகியோர் கோவிலின் அளவுகளை சரி பார்த்தனர் . இது குறித்து அவர்கள் கூறும் பொழுது அங்காளம்மன் கோவில் வரைபடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது கட்டுமானம் தயாரிக்கும் பொருட்டு நாங்கள் கோவிலில் அளவுகளை சரி பார்த்துள்ளோம். உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் கோவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது உடன் சௌந்தர்ராஜன், காமராஜ், செந்தில் மற்றும் மனுதாரர்கள் சுகுமார், பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வேளாண்மை விரிவாக்கம் மையத்திலுள்ள கிடங்கில் விதை இருப்பு பற்றி ஆய்வு திடீர் மேற்கொண்டார்.
    • நில விபரங்கள் ஆதார விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெற அறிவுறுத்தினார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டப் காரிமங்கலம் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா வேளாண்மை விரிவாக்கம் மையத்திலுள்ள கிடங்கில் விதை இருப்பு பற்றி ஆய்வு திடீர் மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து பசிக்கானஅள்ளி கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது விவசாயிகளிடம் கிரைன்ஸ் வலைத்தளத்தில் நில விபரங்கள் ஆதார விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெற அறிவுறுத்தினார்.

    பின்னர் அடிலம் பஞ்சாயத்தில் எண்ணெய் வித்து மரமான வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்து பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் கனகராசு , மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது.
    • முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் இன்று விருத்தாசலம் பைபாஸ் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது. விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த 220 பள்ளி வாகனங்கள் சோதனை தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, சி.சி.டி.வி. உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும், பள்ளி வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரை களை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளும் விதத்தில் முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் பால முருகன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
    • புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந் தேதி நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் 360 பள்ளி வாகனங்களும், அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளி திறக்க உள்ள நிலையில் பள்ளி பஸ்களின் ஆய்வை மே இறுதிக்குள் முடிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் வடக்கு , அவிநாசி வட்டாரத்துக்குட்பட்ட 590 பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பஸ்களின் கண்டிஷன், பள்ளி பஸ்களில் படிக்கட்டுகளின் உயரம், பின்புறம், இடதுபுறம், மற்றும் வலது புறம் உள்ள அவசர கால வழி, விபத்து ஏற்படும் வானங்களில் முதலுதவி வசதி, மாணவ மாணவியர் இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதி சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது.

    • எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் ேபரில் உணவுப்பாது காப்பு மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், ஒசூர் உணவுப்பாது காப்பு அலுவலர் முத்து மாரியப்பன், தளி உணவு ப்பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் சூளகிரி உணவுப் பாது காப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு, ஓசூர் ஒன்றியத்து க்கு உட்பட்ட நஞ்சாபுரம், கொத்த கொண்டபள்ளி,ஒசூர் தர்கா மற்றும் தளி ஒன்றிய ப்பகுதியை சேர்ந்த தளி, பேளகொண்டபள்ளி, அரசகுப்பம் ஆகிய இட ங்களில் திடீர் ஆய்வு மே ற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.ஆய்வறிக்கையின் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட குடிநீர் கம்பெனி உரிமையாளர்க ள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க நடந்து வருகிறது.
    • தரைதளம் அமைக்கும் பணி நடைப்பெற்று வரும் நிலையில் தருமபுரி பேரூராட்சிகள் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன் பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமென்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.

    இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் படுவதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

    பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணியினை கடந்த 25ம் தேதி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    தரைதளம் அமைக்கும் பணி நடைப்பெற்று வரும் நிலையில் தருமபுரி பேரூராட்சிகள் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன் பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பழனி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயந்திமோகன், ஒப்பந்ததாரர் பி.எல்.ஆர்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×