search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials inspect"

    • சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.
    • பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கிளை சிறை கண்காணிப்பாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா , மாவட்ட நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூக பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ் , சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர். ஆய்வின் போது கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.

    • சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
    • எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம்.

    நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது.

    எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

    • அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந் தேதி நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் 360 பள்ளி வாகனங்களும், அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளி திறக்க உள்ள நிலையில் பள்ளி பஸ்களின் ஆய்வை மே இறுதிக்குள் முடிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் வடக்கு , அவிநாசி வட்டாரத்துக்குட்பட்ட 590 பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பஸ்களின் கண்டிஷன், பள்ளி பஸ்களில் படிக்கட்டுகளின் உயரம், பின்புறம், இடதுபுறம், மற்றும் வலது புறம் உள்ள அவசர கால வழி, விபத்து ஏற்படும் வானங்களில் முதலுதவி வசதி, மாணவ மாணவியர் இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதி சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது.

    • தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் நாயுடுபுரம் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.

    மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்கள், மரங்கள் முறிந்து கிடந்த பகுதியில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    இது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கா னலில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்று பகுதியை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடை–பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்
    • பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

     பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் குன்னம் தாலுகா ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த தையல் தொழிற்சாலையையும், பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தையும்,

    முத்துநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தையும், குன்னம் தாலுகா பரவாய் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், உதவி மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    • தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கர்நாடாகா மாநிலத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பியது. அந்த அணை களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ள ளவான 120 அடியை எட்டியது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது அணையில் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றோர பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி கொடு முடி மற்றும் ஊஞ்சலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கொடுமுடி, ஊஞ்சலூர், காசிபாளையம், சத்திரப்பட்டி போன்ற இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

    இதில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி, துணைத்தலைவர் ராஜா கமால் ஹசன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதி காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பகுதி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதி மற்றும் கூடுதுறை பகுதி களிலும் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி செல்கிறது. இதை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள்.

    இதையொட்டி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஈரோடு அக்ரகாரம், கருங்கல்பாளையம், வெண்டி பாளையம், கொடுமுடி உள்பட காவிரி ஆற்று பகுதிகளில் தண்ணீர் அதிகளவு செல்வதால் அதிகாரித்து காணித்து வருகிறார்கள்.

    மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு வருவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி கண்காணித்து வருகிறார்கள்.

    ×