search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு
    X

    கொடுமுடி பகுதியில் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள்ஆய்வு செய்தனர்.

    ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு

    • அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    • தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கர்நாடாகா மாநிலத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பியது. அந்த அணை களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ள ளவான 120 அடியை எட்டியது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது அணையில் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றோர பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி கொடு முடி மற்றும் ஊஞ்சலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கொடுமுடி, ஊஞ்சலூர், காசிபாளையம், சத்திரப்பட்டி போன்ற இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

    இதில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி, துணைத்தலைவர் ராஜா கமால் ஹசன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதி காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பகுதி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதி மற்றும் கூடுதுறை பகுதி களிலும் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி செல்கிறது. இதை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள்.

    இதையொட்டி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஈரோடு அக்ரகாரம், கருங்கல்பாளையம், வெண்டி பாளையம், கொடுமுடி உள்பட காவிரி ஆற்று பகுதிகளில் தண்ணீர் அதிகளவு செல்வதால் அதிகாரித்து காணித்து வருகிறார்கள்.

    மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு வருவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×