காஞ்சிபுரம் கிளை சிறையில் அதிகாரிகள் ஆய்வு

சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம் கிளை சிறையில் அதிகாரிகள் ஆய்வு
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கிளை சிறை கண்காணிப்பாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா , மாவட்ட நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூக பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ் , சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர். ஆய்வின் போது கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com