search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murder"

    • பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர் மகனான ஹரீஷ் (23) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.

    அப்போது அந்த பெண்ணுக்கும் , வெங்கடேஷூக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் அந்த பெண்ணை கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் ஹரீஷ் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    • போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்(வயது 30). இவர் உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவரது ஊரில் உள்ள கோவில் விழா ஒன்றுக்காக பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் தனது தந்தையுடன் நேற்று மாலை வண்ணார்பேட்டைக்கு வந்து விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார்.

    தொடர்ந்து இரவு 9 மணிக்கு உணவு டெலிவரி செய்ய செல்வதாக கூறிவிட்டு முகேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரம் வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சுபிதா அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுபிதா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, குருந்துடையார்புரம் பகுதியில் அவர்கள் முகேசை தேடி பார்த்துள்ளனர். அப்போது ரெயில்வே தண்டவாளம் முன்பாக சாலையில் மோட்டார் சைக்கிள் கிடந்தது. மேலும் அங்குள்ள முட்புதரில் முகேஷ் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து சுபிதா கதறி அழுதார்.

    இதுகுறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் பிரதீப் மற்றும் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் முகேசுக்கும், கீழவீரராகவபுரத்தில் அதே தெருவில் வசிக்கும் சின்னகுட்டி என்பவருக்கும் இடையே கோவில் பிரச்சனையில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், ஒரு வழக்கில் சின்னகுட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த முன்விரோதத்தில் ஆத்திரம் அடைந்த சின்னகுட்டி, தனது சகோதரரின் மகனான அழகு முத்து(24) என்பவரிடம் எப்படியாவது முகேசை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அழகு முத்து தனது நெருங்கிய நண்பரான முருகேஷ்(24) மற்றும் அவரது நண்பர் கிரி(20) மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் அவரது வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். வீட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். உடனே போலீசார் அங்கு சென்று முகேசின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட சல்மான் கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி ஜாஃப்ராபாத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று 25 வயதுடைய வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யும் பதைபதைக்கும் சி.சி.வி.டி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

    கொலை செய்யப்பட்ட சல்மான் கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சல்மான் அவரது நண்பர்களுடன் ஜாஃப்ராபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளம்பெண்ணின் தந்தை மன்சூர், சகோதரர் மோஷின் மற்றும் மற்றொரு சகோதர் என 3 பேர் சேர்ந்து சல்மானை வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சல்மானின் நண்பர்கள் ஓடி விட்டனர் என்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

    • செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.

    நேற்று இரவு யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

    பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்று காலை வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
    • சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூரை சேர்ந்தவர் விஷ்ணு(வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏழுமலை(25) என்பவருடன் மொளச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுங்குவார் சத்திரம் நோக்கி சென்றார்.

    அப்போது திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பரங்கிராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மீது விஷ்ணுவும் அவரது நண்பர் ஏழுமலையும் வந்த மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிறிது தூரம் சென்றபோது பரங்கிராஜ் ஓட்டி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது பரங்கிராஜ் திட்டமிட்டு காரை வேகமாக ஓட்டிவந்து மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு விஷ்ணுவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பரங்கிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் சீமான் (22). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது சக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுத்தியலால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.

    அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    ஆனால் சீமான் கிடைக்காததால் அவருடன் சுற்றித்திரிந்த நண்பர்களுடன் விசாரிக்குமாறு பெற்றோர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர்பாட்டிலால் தலையில் சீமானை தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவர் உயிரோடு உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதுகூட தெரியவில்லை. உயிரோடு வந்துவிட்டால் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு துணியில் சுற்றி வேலாயுதபுரம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு எப்போதும் போல் அவர்கள் வேலைக்குச் சென்று சீமானின் குடும்பத்தினருடனும் அடிக்கடி பேசி அவன் வந்துவிட்டானா என கேட்டுள்ளனர்.

    ஆனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் இருந்ததால் மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சஞ்சீவ்குமார், சந்தனகுமார், பிரகாஷ், லோகநாதன் ஆகியோரை விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் தாங்கள் கொலை செய்ததாக தெரிவித்தனர். போதையில் கொலை செய்ததை போலீசார் விசாரணை நடத்திய போது போதையிலேயே உளறிக் கொட்டியதால் 4 பேரையும் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து சீமான் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட கிணற்றிலிருந்து அவரது எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை டி.என்.ஏ. பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்து கிடந்தவர் யார் ? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
    • உடல் கிடந்த இடம் அருகே ரத்த கறை படிந்த கல் ஒன்று கிடந்தது.

    போரூர்:

    கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை தலையில் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் யார் ? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவரது தலையில் 3 இடங்களில் காயம் உள்ளது. மேலும் உடல் கிடந்த இடம் அருகே ரத்த கறை படிந்த கல் ஒன்று கிடந்தது. எனவே நண்பர்களுடன் இருந்த போது ஏற்பட்ட தகராறில் அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.
    • கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடி முதல் தெருவை சேர்ந்தவர் தும்பி என்ற ரமேஷ் (42). இளநீர் விற்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் முருங்கப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் சாலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகம் உள்ளது. அதன் அருகே ரமேஷ் இளநீர் விற்பது வாடிக்கை. நேற்று இரவு 7.30 மணிக்கு ரமேசும், முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் வீதியை சேர்ந்த ஸ்டீபனும், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் வீட்டுக்கு சென்று கத்தியுடன் திரும்பினார். போதையில் இருந்த ரமேசை அவர் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

    அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்தை சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா, எஸ்.பி. ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.

    இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் ரமேசை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரலில் ரமேஷ் ஜாமினில் வெளிவந்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஸ்டீபன், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுக்கு முன்பு சி.டி. விற்பனை செய்த வழக்கில் ஜாமின் தரவில்லை என்பதால் கோர்ட்டில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(வயது25). வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கஞ்சா விற்பனை மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பெரியபாளையத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை அடித்து துன்புறுத்தினார்.
    • செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காளஹஸ்தி, எஸ்டி காலனியை சேர்ந்தவர் செஞ்சைய்யா. கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.

    மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார்.

    வலி தாங்காமல் அவர்கள் கதறி அழுதனர். இவர்களது அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்தய்யா (33) என்பவர் ஓடி வந்து செஞ்சைய்யாவை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிந்தய்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிந்தய்யா இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காளஹஸ்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிந்தய்யாவின் பிணத்தைமிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் செஞ்சைய்யாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை அருகே உள்ள சின்ன இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது.25) திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். சின்ன இரும்பேட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது இருளில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் கத்தி,அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கன்னியப்பனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற கும்பல் கன்னியப்பனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கன்னியப்பன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்?கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்ததா? அல்லது பணத்தகராறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக கன்னியப்பனின் நண்ப ர்கள், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கன்னியப்பன் கடைசியாகயாரிடம் பேசினார் என்று அவரது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் தினந்தோறும் பணி முடிந்து வருவதை நோட்ட மிட்டு மர்ம கும்பல் தீர்த்து கட்டி உள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார்ஆய்வு செய்து வருகின்றனர்.

    கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சதீஷ்குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றார்.
    • அண்ணணை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சதீஷ்குமார்(34). நகுலன் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் குப்புசாமி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சதீஷ்குமார் மரம் அறுக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நகுலன் பவானி அருகே உள்ள காடையாம்பட்டியில் சாய தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அண்ணன்- தம்பி இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சதீஸ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மது போதையில் கிராமத்தில் உள்ள பலரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சதீஸ்குமார் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அதை பார்த்த அவரது தம்பி நகுலன், அண்ணன் சதீஸ்குமாரை வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு சதீஷ்குமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு தன்னிடம் தகராறு செய்த 2 பேரையும் வெட்டி கொலை செய்ய போவதாக கிளம்பி உள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சதீஸ்குமாரை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றார்.

    அதை பார்த்த நகுலன், அண்ணன் சதீஸ்குமாரை தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சதீஸ்குமார் கீழே விழவே, அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய நகுலன் ஆத்திரத்தில் சதீஸ்குமாரின் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஸ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சதீஷ்குமார் வீட்டுக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அண்ணனை கொலை செய்த அவரது தம்பி நகுலனை கைது செய்தனர்.

    குடிபோதையில் தகராறு செய்த அண்ணணை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×