காளஹஸ்தியில் கணவன், மனைவி சண்டையை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை

மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை அடித்து துன்புறுத்தினார்.செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.
காளஹஸ்தியில் கணவன், மனைவி சண்டையை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி, எஸ்டி காலனியை சேர்ந்தவர் செஞ்சைய்யா. கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.

மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார்.

வலி தாங்காமல் அவர்கள் கதறி அழுதனர். இவர்களது அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்தய்யா (33) என்பவர் ஓடி வந்து செஞ்சைய்யாவை தடுத்து நிறுத்தினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.

இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிந்தய்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிந்தய்யா இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காளஹஸ்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிந்தய்யாவின் பிணத்தைமிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் செஞ்சைய்யாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com