search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth killed"

    நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொன்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங் கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ளது மேலபாலாமடை. இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு கலையரங்கம் உள்ளது. அந்த கலையரங்கின் மேடையில் இன்று காலையில் ஒரு வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருந்தது. அதை சுற்றி ரத்தம் சிதறி கிடந்தது. இதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வாலிபரின் தலைமட்டும் கலைரயங்கில் கிடந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதுபற்றி சீவலப்பேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் சீவலப்பேரி போலீசார் விரைந்து வந்து சம்பவஇடத்தை பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரது உடல் எங்கே கிடக்கிறது? என்று விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பாளை வீரமாணிக்கபுரம் தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பால்துரை (வயது 23) என்பது தெரியவந்தது.

    அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? பால்துரையின் பின்னணி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பால்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

    பால்துரையின் தந்தை மற்றும் தாய் சுசீலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மாரிமுத்து வீரமாணிக்கபுரத்திலும், அவரது மனைவி சுசீலா தனது சொந்த ஊரான மேல பாலாமடையை அடுத்த ராஜவல்லிபுரத்திலும் வசித்து வந்தனர். பால்துரை தனது தாயாரை பார்க்க அவ்வப்போது ராஜவல்லி புரத்திற்கு சென்று வருவாராம். இந்த நிலையில் தாய் சுசீலாவின் உறவினர் ஒருவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தையை பார்ப்பதற்காக நேற்று தாய் சுசீலாவுடன் பால்துரை சென்றிருந்தார். அதன் பிறகு இருவரும் பஸ்சில் ராஜவல்லி புரத்துக்கு சென்றனர். பஸ் நிறுத்தம் வந்ததும் சுசீலா மட்டும் பஸ்சில் இருந்து இறங்கினார். பால்துரையை காணவில்லை. வழக்கம் போல் அவர் வேறு எங்காவது சென்றிருப்பார் என நினைத்த சுசீலா தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவு ஆகியும் பால்துரை வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து சுசீலா தனது உறவினர்கள் மூலமாக பால்துரையை தேடினார். எனினும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பால்துரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நள்ளிரவில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பால்துரை கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி ஓடி நின்றது. அந்த இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது ரத்தக்கறையுடன் ஒரு சாக்குப்பை கிடந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் பல இடங்களில் தேடியும் பால்துரையின் உடல் கிடைக்கவில்லை.

    ஆகவே கொலையாளிகள் பால்துரையை வேறு இடத்தில் வைத்து கொன்றுவிட்டு, தலையை மட்டும் சம்பவ இடத்தில் வைத்துவிட்டு, உடலை வேறு எங்காவது கொண்டு சென்று வீசியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் பால்துரையின் உடலை பல இடங்களில் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேலபாலாமடை மற்றும் வீரமாணிக்கபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், பால்துரை தலை மீட்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார்.

    பால்துரை கொலைக்கு காரணம் என்ன? அவருக்கு அந்த பகுதியில் வேறு யாருடனும் பகை உள்ளதா? கொலைக்கு பெண் தகராறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளிகளை பிடிக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலபாட்டம் கிராமத்தை அடுத்த கொட்டாரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வினோத் (வயது30). மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் வாசுதேவன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி- மகனை பிரிந்து மும்பை சென்று விட்டார்.

    இதனால் வருமானம் இன்றி தவித்த வாசுதேவனின் மனைவியும் எங்கோ சென்று விட்டார். இதனால் வீடு இன்றி தவித்த வினோத் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். தினமும் இரவில் பஸ் நிலையத்தில் உள்ள ஏதாவது ஒரு கடையின் முன் படுத்து தூங்குவார்.

    நேற்று இரவு இவர் மது குடித்து விட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு வாசல் அருகே உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த மர்ம கும்பல், இரும்பு கம்பியால் அவரை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமானார்.

    இன்று காலை அந்த பகுதி வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது, அங்கு வினோத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றனர்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் பொதுவாக பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் மிரட்டி பணத்தை அபகரித்து, மது குடிப்பதும், கஞ்சா அடிப்பதுமாக இருந்துள்ளார். அவர்களிடம் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பஸ் நிலையத்துக்கு வரும் அப்பாவி பயணிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் பஸ் நிலைய பகுதிகளில் வழக்கமாக படுத்து தூங்கும் பிச்சைக் காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் பிச்சைக்காரர்களிடம் பணத்தை அபகரித்து மது குடித்து வந்ததால், சில பிச்சைக்காரர்களே சேர்ந்து வினோத்தை கொலை செய்து இருக்கலாமா? அல்லது அவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை தெற்குவாசலில் குடிபோதையில் நண்பர்களால் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை கிருதுமால் நதிக்கரை சாலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற சூர்யாவிடம் கடன் வாங்கினார். அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் சதீஷ்குமார் மதுரை வந்திருந்தார். அவரை முத்து போனில் தெற்குவாசலுக்கு வருமாறு அழைத்தார்.

    தெற்குவாசல் பாலத்தின் கீழ் சதீஷ்குமாருடன், நண்பர்களான முத்து ஜெயபால், அண்ணாமலை, மோகன், மதியழகன் ஆகியோர் மது குடித்தனர்.

    அப்போது கடனை முத்து திருப்பிக்கேட்டார். அதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து, சதீஷ்குமாரை பீர் பாட்டிலாலும், கத்தியாலும் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு நண்பர்கள் ஓடிவிட்டனர்.

    இது குறித்து தெற்குவாசல் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்து உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

    மத்திகிரி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மத்திகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள சிப்பாய் பாளையத்தை சேர்ந்த சபீர்கான் மகன் ஆசீப்கான் (வயது23). நேற்று இரவு 11 மணி அளவில் மத்திகிரியில் இருந்து எடையநல்லூர் செல்லும் வழியில் உள்ள உருதுபள்ளி அருகே ஆசீப்கான் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை குடல் மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தியது. சரமாரியாகவும் தாக்கினார்கள். இதில் அவரது குடல் வெளியே வந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    கொலை செய்யப்பட்ட ஆசீப்கான் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. ஏற்கனவே அவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடை வாசலில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராமநாதபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.டி. கடையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று காலை காரிக்கூட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வாசல் அருகில் தலையில் படுகாயங்களுடன் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சசிக்குமார்(44) என்பவர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் பிணமாக கிடந்ததால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    திருவொற்றியூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    நாகர்கோவில் ஊத்தங்குழி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது25). டிரைவர். இவர் திருவொற்றியூர் ஈசானிமூர்த்தி கோவில் தெருவில் உள்ள வீட்டில் 3-வது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    நேற்று இரவு அவர் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். #tamilnews
    ஆம்பூரில் குடும்ப தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பார்த்திபன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது உறவினர் திருத்தணியை சேர்ந்த காணிக்கைராஜ். இன்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த காணிக்கைராஜ் கல்லால் பார்த்திபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பார்த்திபன் இறந்தார்.

    உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காணிக்கைராஜ் தாக்கியதில் பார்த்திபன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பார்த்திபன் கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பார்த்திபனை தாக்கிய காணிக்கைராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜா அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை பெல் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் இவரது மகன் அருண்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை பொன்னாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளன. மர்மநபர்கள் அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருண்குமாருக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யப்பட்டார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழசரக்கல் விளை ரகுமத்கார்டனைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). மீனவர். கலப்பு திருமணம் செய்தவர் இவரது மனைவி சகானா. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    செல்வம் நேற்றுமுன் தினம் இரவு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டு அருகே வந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. 

    அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் செல்வத்தின் கழுத்து, மார்பு என உடலின் பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    கடைக்கு சென்ற செல்வம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி சகானா, கணவரை தேடி வெளியே வந்தார். அப்போது செல்வம் ரோட்டில் அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டு கதறிஅழுதார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து செல்வத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செல்வத்தின் நண்பரான ஆஸ்டின் என்பவரை இளங்கடையைச் சேர்ந்த மனோ என்ற உஸ்மான் (30)  தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வம் உஸ்மானை சந்தித்து அவரை கண்டித்தார். அப்போது ஆத்திரத்தில் உஸ்மானை செல்வமும், ஆஸ்டினும் சேர்ந்து தாக்கினர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் செல்வத்தை கொலை செய்ய உஸ்மான் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களான கீழசரக்கல்விளையைச் சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் உஸ்மானுக்கு உதவ சம்மதித்தனர்.  அவர்கள் திட்டப்படி நேற்று முன்தினம் இரவு செல்வத்தை அவரது வீட்டு அருகிலேயே வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து உஸ்மான், பிரதீப், பிரபு, ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். செல்வம் கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் 4 பேரை தவிர மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான உஸ்மான் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
    பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீட்டு வசதி வாரிய பகுதியையொட்டி ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அதன் அருகே புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று புதரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    அந்த வாலிபர் பேண்டும், சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றினர். அதில், தியாகு, வல்லம்படுகை என்று இருந்தது.

    யாரோ மர்ம மனிதர்கள் அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தண்டவாளம் அருகே வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிறார்கள். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ சரக்கல் விளையை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவரது மனைவி பெயர் சகானா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வமும் சகானாவும் ஒருவரைஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் அதை மீறி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்வம் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். பிறகு அவர் நள்ளிரவு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தனது வீட்டை நெருங்கும் போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது.

    அதை பார்த் ததும் சுதாரித்துக் கொண்ட செல்வம் தனது மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த கும்பலிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை தப்பவிடாமல் மடக்கிப்பிடித்தது. பிறகு தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் செல்வத்தின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் வெட்டு விழுந்தது.

    இதனால் நிலை தடுமாறிய அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிள் விழுந்து அமுக்கியதால் அவரால் அந்த கும்பலிடம் இருந்து தப்ப முடியவில்லை. அவரை தீர்த்துகட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

    செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

    மேலும் இந்த கொடூர கொலை பற்றி கோட்டார் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். செல்வத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை பற்றி கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்வத்தின் நண்பர் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி உள்ளனர். நண்பரை தாக்கியவர்களை செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் செல்வத்திற்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த முன்விரோதத்தில் செல்வத்தை அவர்கள் தீர்த்துகட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    செல்வம் கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 2 தனி போலீஸ்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொலை நடந்த பகுதியில் மோதல் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். 

    திருவண்ணாமலை அருகே வாலிபர் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அத்திமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் பாபு (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள அவரது சித்தி இந்திரா (35) என்பவர் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவருக்கும், பாபுவிற்கும் அந்த பகுதியில் தனித்தனியாக இடம் உள்ளது. இவர்களது இடத்தின் அருகில் ஆறு உள்ளது.

    இந்த ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அத்திமூர் பகுதியில் பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து செல்வராஜ், அவரது மனைவி குள்ளம்மாள் (55). இவர்களது மகன்கள் சரவணன் (35), ஏழுமலை (33), பழனி (31) ஆகியோர் சேர்ந்து பாபுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், குள்ளம்மாள், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், குள்ளம்மாளிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

    ×