search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dies"

    • உடன்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவரது நண்பர் மாணிக்கம் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தனர்.
    • விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    உடன்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவரது நண்பர் மாணிக்கம் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தனர்.

    நேற்று முத்துக்குமாரும், மாணிக்கமும் சினிமா பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாத்தான் குளம் சென்றுள்ளனர். சினிமா பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் உடன்குடி திரும்பினர்.

    அப்போது சாத்தான் குளம் அரசு கலைக்கல்லூரி அருகே வந்தபோது கார் ஒன்று அவர்களின் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த மாணிக்கம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வயலில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவரது மனைவி கற்பகம்.இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்ல வதற்காக அந்தப் பகுதியில் விவசாய நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வீரமுத்து அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்சார கம்பி அறுந்து விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
    • குடிநீர் எடுத்த போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் வெள்ளைச்சாமி (வயது 48) கூலித் தொழிலாளியான இவர், 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குடத்துடன் இறங்கி குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது, குடத்துடன் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அக்கம் பக்கம்தினார் கொடுத்த தகவல்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இறங்கி சடலமாக கிடந்த வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்தவர் அப்பாச்சி (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு அப்பாச்சி தனது மோட்டார் சைக்கிளில் வடுகபாளையம் பிரிவைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அப்பாச்சி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அப்பாச்சி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுந்து கிடந்த ஒயரை எடுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த உக்கல் கிராமம் குட்டை கரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45) விவசாய கூலி தொழிலாளி. இவது மனைவி கவுரி. இவர்களுக்கு செல்வம், வெற்றிவேல் என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சங்கர் நேற்று மாலை வீட்டின் முன்பு அறுந்து கிடந்த ஒயரை எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தது கிடந்தார். சங்கரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து இவருடைய மனைவி கவுரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிதார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது தொழிலாளி விபத்தில் சிக்கினார்.
    • விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது40). கூலி தொழிலாளி. இவர் நேற்று தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கன்னியாகுமரியை நோக்கி சென்ற கார் மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது.
    • ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.

    நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    • கொதிக்கும் எண்ணெய் உடலில் ஊற்றி தொழிலாளி உயிரிழந்தார்.
    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்

    திருச்சி:

    திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50). செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர், கடந்த 28 -ந் தேதி மது போதையில் தன்னுடைய மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சமையல் அறையில் இருந்து கொதிக்கும் எண்ணையை கையில் எடுத்து வந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது எண்ணை கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த குமாரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குமார் உயிரிழந்தார். இது குறித்து குமாரின் மகள் ரேவதி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் நிறுவனம் நாயுடு மங்கலம் அருகே இயங்கி வருகிறது.

    இங்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாராயணன் (மாஹி 50), (சுரேஷா 30), (தசரத் 18), (அகிலேஷ் 23), உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த, 8ம் தேதி, ஹாலோ பிரிக்ஸ் கற்களை, டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள், டிராக்டரில் இருந்து சரிந்து, தேவநாராயணன்மாஹி, சுரேஷா, தசரத், ஆகியோர் மீது விழுந்து படுகாயமடைந்தனர்.

    3 பேரும் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தேவநாராயணன்மாஹி, கடந்த 8ந் தேதி மாலை உயிரிழந்தார்.

    இது குறித்து, கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே புதிய வீடு கட்டிய கூலி தொழிலாளி திடீரென இறந்தார்.
    • இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு என்.மூலக்குப்பம் சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 38). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது ஊரில் புதிய வீடு சிவ முருகன் கட்டி வந்தார். இந்த நிலையில் இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌. இன்று அதிகாலை திடீரென்று சிவமுருகனுக்கு கை கால் மறுத்து திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிவமுருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அப்போது சிவ முருகனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் குளிக்க சென்ற போது கோவில் குளத்தில் தவறி விழுந்து சைக்கிள் கடை ஊழியர் பலி
    • முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது.

    புதுச்சேரி:

    குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதனையறிந்த அப்பகுதியினர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். அப்போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் மஞ்சு நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்தி மருது (38)என்பதும் இவர் அந்த பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்ததும் ெதரியவந்தது.இவர் மது போதையில் குளத்தில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.இறந்து போன சக்தி மருதுக்கு இந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    காரனோடையில் கண்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த நெற்குன்றம் பள்ள சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த சாலையில் வந்த கனரக வாகனமான கண்டெய்னர் லாரி அதி வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இந்த விபத்து கனரக வாகனம் நகருக்குள் வந்ததால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய லாரி நகருக்குள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கனரக வாகனங்களை இனி அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
    ×