search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மோதி"

    காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42). திருமணமாக தவரான இவர் கோவில் பூசாரி இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரியை அடுத்து வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது. இதில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ் டிரைவரான சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
    • அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து இன்று காலை சேலம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் தாரமங்கலத்தில் இருந்து நங்கவள்ளி செல்லும் பிரதான சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    சாலையை கடக்க முயற்சி

    பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டூர் வீரக்கல் அருகே கக்குவான் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (45) மற்றும் அவரது அண்ணன் மகனான ஹரிஹரன் (22) ஆகியோர் விபத்தில் சிக்கினர்.

    தலை நசுங்கி

    இதில் தங்கவேல் தலை மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஹரன் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஹரிஹரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டிரைவர் ஓட்டம்

    இதனிடையே பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமண நிகழ்ச்சி

    விபத்து குறித்து தகவல் அறிந்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான தங்கவேல் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரிஹரன் இளங்கலை பட்டபடிப்பு முடித்து விட்டு தறி தொழில் செய்து வருகிறார். இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலத்திற்கு செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    நாமக்கல்:

    திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா்.

    அங்கிருந்த வா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
    • தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரங்குப்பயன் காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்குப்பயன் என்கிற ரங்கசாமி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் ரங்குப்பயன் சம்பவத்தன்று இரவு காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரங்குப்பயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • சரவணக்குமார் நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 27).

    இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். சரவணக்குமார் சத்தியமங்கலம் ஈரோடு ரோடு நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்தவர் அப்பாச்சி (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு அப்பாச்சி தனது மோட்டார் சைக்கிளில் வடுகபாளையம் பிரிவைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அப்பாச்சி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அப்பாச்சி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×