நாமக்கல் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
நாமக்கல் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
Published on

நாமக்கல்:

திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்த வா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com